எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்க வேண்டுமென்று அனைவரும் நினைப்போம். ஒரு சில நேரம் நாம் ஏதாவது ஒரு விஷயங்கள் செய்யும்போது அதில் தடைகள் ஏற்படும் அதனால் மிகவும் வயதிலேயே அந்த ஒரு விஷயத்தை செய்வோம். அந்த வகையில் அந்த பயத்தை நீக்குவதற்கு முருக பெருமான் வழிபாடு மிகவும் முக்கியம். மேலும் முருகப்பெருமானுடைய மந்திரமும் நமக்கு அவசியம் அந்த மந்திரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

முருகன் வழிபாடு
இன்றைய காலத்தில் முருகப்பெருமான் அனைவருடைய பிரச்சனைகளையும் நிறைய பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய ஒரு தெய்வமாக இருக்கிறார். முருகப்பெருமானை நினைத்து பலரும் பலவிதமான வேண்டுதல்களை வைத்து விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்கள் அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த முருக பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமை சஷ்டி கிருத்திகை போன்ற தினங்களில் வழிபாடு செய்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பிரச்சனைகள் வரும் பொழுது அந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு முருகப்பெருமானை அவருக்கு உகந்த தினங்களில் வழிபாடு செய்யலாம். முழு மனதோடு நம்பி முருகப்பெருமானை வழிபாடு செய்தால் நிச்சயமாக அவருடைய அருளையும் நம்மால் சேர்த்து பெற முடியும்.
முருகப்பெருமானின் மந்திர வழிபாடு
முருகப்பெருமானுக்கு நிறைய மந்திரங்கள் உள்ளது அந்த மந்திரங்களை சொல்லி நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் போது வாழ்க்கையில் எந்த தடைகளும் நமக்கு வராது வெற்றிகள் உண்டாகும். ஒரு செயலை செய்வதற்கு முன்பாக முருகர் பெருமானை வேண்டிக் கொண்டு அவருடைய மந்திரத்தை உச்சரித்து விட்டு பிறகு அந்த செயலை தொடங்கினால் நிச்சயமாக வெற்றி உண்டாகும்.
மந்திரம்
“ஓம் ஐம் சம் சரவணபவாய நமஹ”
இந்த மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானை வழிபாடு செய்வது முருகப்பெருமானுடைய அருளை பெறுவதற்கும் நாம் செய்கின்ற செயலில் வெற்றியடைவதற்கும் உதவியாக இருக்கும். வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய பலவிதமான தடைகளை தகர்த்தெறிய இந்த முருகப்பெருமானின் மந்திர வழிபாட்டை செய்யலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம் எந்த இடத்தில் அமர்ந்து வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம் எந்தவித நிபந்தனையும் கிடையாது. முழு மனதோடு முருகப்பெருமானுக்கு பிடித்த மந்திரத்தை கூறி அவருடைய அருளை பெறுங்கள்.
இதனையும் படியுங்கள் : சொந்த வீடு வாங்க பழனி முருகன் வழிபாடு




