பொதுவா முருங்கை கீரை வைத்து முருங்கைக்கீரை கடைல், முருங்கைக்கீரை பொரியல், முருங்கை கீரை வடை இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். முருங்கைக் கீரையில் நிறைய சத்துக்கள் இருக்கு. முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒரு ஆரோக்கிய நன்மை இருக்கு அப்படின்னு சொல்லலாம். அந்த வகையில முருங்கைக்கீரை சாப்பிடுவது மூலமா உடம்புக்கு தேவையான ரத்தம் கிடைக்கும். இப்போ நிறைய பேருக்கு உடம்பில் ரத்த அளவு கம்மியா இருக்கு அந்த மாதிரி கம்மியா இருக்குறவங்களுக்கு முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட கொடுக்கலாம்.
ஆனா பொதுவா குழந்தைகளுக்கு கீரை சாப்பிடுவதற்கு பிடிக்காது சாப்பிட மாட்டேன் என அடம் பிடிப்பாங்க. அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு முருங்கைக் கீரையை இந்த மாதிரி ஏதாவது ஒரு ரெசிபியில் சேர்த்து செஞ்சு கொடுக்கலாம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம முருங்கைக் கீரையை நன்றாக அரைத்து அதனை அரிசி மாவோடு கலந்து சூப்பரான இடியாப்பம் செய்ய போறோம். இது கூட தேங்காய் பால் ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும் ஒரு சிலர் இடியாப்பத்துக்கு ஆட்டுக்கால் பாயா பட்டாணி குருமா இதெல்லாம் வச்சு சாப்பிடுவாங்க உங்களுக்கு என்ன சாப்பிட பிடிக்கிதோ அதை செஞ்சு சாப்பிட்டு போங்க.
ஆனா இந்த முருங்கை கீரை இடியாப்பம் எப்படி இருக்கும்னு யோசிக்காதீங்க கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். பச்சை கலர்ல பாக்குறதுக்கே அவ்ளோ சூப்பரா இருக்கும் டேஸ்டான இந்த முருங்கைக்கீரை இடியாப்பத்தை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. முக்கியமா குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க கீரையே வேணாம்னு சொல்றவங்க கூட இந்த இடியாப்பத்தை விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ஹெல்தியான முருங்கைக்கீரை இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் கூடவே தேங்காய் பாலும் பாக்கலாம்.
முருங்கைக்கீரை இடியாப்பம் | Murungai Keerai Idiyappam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 இட்லி பாத்திரம்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கைப்பிடி முருங்கை கீரை
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் நெய்
- 1 கப் அரிசி மாவு
- உப்பு தேவையான அளவு
- 1 கப் தேங்காய் துருவல்
- 2 ஏலக்காய்
- நாட்டு சர்க்கரை தேவையான அளவு
செய்முறை
- முருங்கைக் கீரையை நன்றாக கழுவி அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து சீரகம் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பாத்திரத்தில் அரிசி மாவு சேர்த்து விழுதை சேர்த்து சுடு தண்ணீர் சேர்த்து நெய் சேர்த்து நன்றாக பிசைந்து இடியாப்பமாக பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து ஏலக்காய் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து இடியாப்பத்துடன் பரிமாறினால் சுவையான முருங்கை கீரை இடியாப்பம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு ருசியான ராகி முருங்கை கீரை அடை இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!