- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, tamil nadu
- Course
- LUNCH
முருங்கை மரத்தில் இலையும், காயும் மட்டும் தான் பலன் கொடுக்கும் என்றில்லை. முருங்கைப்பூவும் அதிகப்படியான பலன்களை கொண்டிருக்கிறது. சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்று அழைத்தார்கள். முருங்கையின் பயன்களை ஒரு புத்தமாகவே வெளியிடலாம். முருங்கை இலை, வேர், பூ, பிஞ்சு, காய், பட்டை என்று அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. முருங்கை மரங்களில் இலைகளை மறைத்தபடி பூக்கள் பூத்துக் குலுங்கும் பருவம் இது. அந்தந்தப் பருவங்களில் விளைகிறவற்றை உணவாகக் கொள்வதுதான் நம் முன்னோர் வகுத்துவைத்திருக்கும் உணவு முறை.
“மருத்துவக் குணமும் இரும்புச்சத்தும் நிறைந்த முருங்கைப்பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், சளித்தொல்லை நீங்கும். வீட்டில் முருங்கை மரம் இல்லாதவர்கள் உழவர் சந்தைகளிலும் காய்கறிச் சந்தைகளிலும் வாங்கிப் பயன்படுத்தலாம். முருங்கைப்பூ பால், முருங்கைப்பூ சூப், முருங்கைப்பூ சாதம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்குத் தெரியும்.
அதில் மருத்துவக் குணங்கள் இருப்பதாகச் சொல்லக்கேட்டு விதவிதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கை பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று! முருங்கை பூ சாதம் சாப்பிடுவதால் வாதம் பிரச்சனையை எளிதில் குணமாகும். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை பூவில் அருமையான முட்டை வறுவல் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : முருங்கைப்பூ கிடைச்சா ஒரு தடவை இந்த முருங்கைப்பூ முட்டை பொரியல் செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் முருங்கை பூவை எடுத்து காம்புகளை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், தேங்காய், சோம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் முருங்கை பூவை சேர்த்து வதக்கவும்.
பின் மிளகாய்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து, முட்டையை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கை பூ முட்டை வறுவல் தயார். இந்த முருங்கை பூ முட்டை வறுவல் சாதம், மற்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






