- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- dinner
தினமும் இரவில் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சீஸ் பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பாஸ்தாவின் தாயகமான இத்தாலியில், மூன்று வகைகளில் இது பரிமாறப்பட்டாலும், உலக அளவில் நூற்றுக் கணக்கான வடிவங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உலா வருகிறது.
பெரும்பாலும் மைதா மாவைப் பயன் படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப் படுகிறது. நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. நம்மில் பலருக்கு இத்தாலிய உணவு என்றாலே பிசா தான் ஞாபகத்திற்கும் வரும். இங்கே நாம் பிசாவை விட செய்வதற்கு எளிதான, அதே நேரம் சுவையான காளான் சீஸ் பாஸ்தா எப்படி செய்வது என்று பார்ப்போம். மாலையில் வீட்டிற்கு போனதும், பசியை ஆரோக்கியமான முறையில் போக்க வேண்டுமானால், மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடுவதற்கு ஏற்றவாறான பாஸ்தாவை செய்து சாப்பிடுங்கள்.
அதிலும் பாஸ்தாவை செய்ய ஆரம்பிக்கும் போது அதில் காய்கறிகள் மற்றும் சீஸ் சேர்த்து செய்தால், பாஸ்தா இன்னும் அருமையாக இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது வழக்கம். அப்போது நீங்கள் பாஸ்தா செய்துகொடுப்பீர்கள். தினமும் ஒரே மாதிரியான சுவையில் செய்துகொடுத்தால் பாஸ்தா சாப்பிடுவது பிடிக்காமல் போய்விடும். அதனால் இது போல் பாஸ்தா செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகாது..!
இதனையும் படியுங்கள் : ருசியான சிறுதானிய பாஸ்தா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பாஸ்தாவை வேக வைத்துக் கொள்ளவும்.
பின் பாஸ்தா வெந்ததும் அதனை எடுத்து தண்ணீரை வடித்து குளிர்ந்த நீர் ஊற்றி ஆறவிடவும்.
பின் ஒயிட் சாஸ் செய்ய ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய், மைதா மாவு சேர்த்து மிதமாக வறுக்கவும். பின் இதில் பால் ஊற்றி கெட்டியானதும், அதில் சீஸ் சேர்த்து சாஸ் போல் செய்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் காளான், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு ஒயிட் சாஸ் கலவையில் வேக வைத்த பாஸ்தா, வதக்கிய காய்கறிகள், மிளகுத்தூள் சேர்த்து ஒன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான காளான் சீஸ் பாஸ்தா தயார்.






