- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, Side Dish
மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு காளான் ரவை வறுவல் செய்யுங்கள். காளான் வைத்து காளான் பிரியாணி, காளான் கிரேவி, காளான் பட்டர் மசாலா, காளான் பிரைடு ரைஸ் அப்படின்னு நிறைய காளான் ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம். ஆனால் இன்று நாம் செய்யப் போகும் இந்த காரசாரமான காளான் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துவிட்டால் போதும், இந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிவிடுவார்கள்.
அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான காளான் ரவை வறுவல் எப்படி செய்வதென்று என்பதை தான் பார்க்க போறோம். இந்த காளான் ரவை வறுவல் சுட சுட சாதத்திற்கு தொட்டு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான காளான் ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது சுவையான காளான் மசாலா டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கமகமக்கும் ஆரோக்கியமான சுவையான காளான் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் மற்றும் காஷ்மீர் மிளகாயை சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பின் இந்த மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் வினிகர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் காளானை இரண்டு துண்டுகளாக நறுக்கி அதனுடன் அரைத்த மிளகாய் விழுது, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள காளானை ரவையில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் ரவை வறுவல் தயார்.






