- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலானோரின் வீட்டில் மதிய வேளையில் ஈசியா ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். சொல்லப்போனால் மதிய வேளைக்கு சிம்பிளா ஏதாவது செய்து வேலையை வேகமாக முடிக்க பார்ப்பார்கள். உங்கள் வீட்டிலும் அந்த நிலை தானா? மதிய வேளைக்கு சுவையாக அதே நேரத்தில் சட்டுன்னு என்ன செய்வது என்று தெரியாமல் தினமும் யோசிப்பீர்களா? உங்கள் வீட்டில் காளான் இருக்கிறதா? அப்படியானால் அதை வைத்து சூப்பரான சாதம் செய்து சாப்பிடுங்கள். காளான் உணவுகளை பெரும்பாலானவர்கள் வீட்டில் வாங்கி சமைப்பதில்லை.
அப்படியே சமைத்தாலும் ஒரே மாதிரி தான் செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு முறை இந்த பதிவில் சொல்லப்போவது போல மஷ்ரூம் ரைஸ் செய்து சாப்பிட்டுப் பாருங்கள். காளானில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. காளான்கள் கொழுப்பைக் குறைக்கும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முதலான பல்வேறு பலன்கள் அதை உண்பதால் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்தோடு அவை குறைந்த அளவு உணவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள், ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.
பெரும்பாலான உணவுகளைப் போலவே ஊட்டச்சத்து அடர்த்தியான, காளான்களும் ஆரோக்கியத்தை அளிக்கின்றன. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள காளானை வைத்து சுவையான மஷ்ரூம் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மிகவும் சுலபமாக செய்து முடித்து விடலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட மதிய உணவாக இந்த ரெசிபியை அடைத்துக் கொடுக்கலாம். இப்ப வாருங்கள் சுவையான மஷ்ரூம் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஒரு தடவை வித்தியாசமான இந்த மீன் பிரைட் ரைஸ் இப்படி செஞ்சு பாருங்க முழுவதும் காலி ஆகிடும்!!
Ingredients
Method
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சூடானதும் மெல்லியதாக நறுக்கிய காளான், மிளகு தூள், உப்பு சேர்த்து ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் சில்லி பிளேக்ஸ், மிளகு தூள், இட்டாலியன் சீசனிங் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் ஊற வைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
பின் ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்து அதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் வேக விடவும்.
சாதம் நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மஷ்ரூம் ரைஸ் தயார்.






