- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Soup
நீங்கள் எப்பொழுதும் வீட்டில் செய்த உணவுகளையும், கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் விட்டது புதியதாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால். நீங்கள் கண்டிப்பாக சூப் குடித்து பாருங்கள் சூப்பில் பல வகையான சூப்புகள் இருக்கும். உதாரணமாக ஆட்டுக்கால் சூப், நண்டு சூப், வாழைத்தண்டு சூப் இதுபோன்று சூப்கள் கடைகளில் விற்ப்பார்கள். நீங்கள் கடையில் போய் சூப் சாப்பிடுவதற்கு பதிலாக இதுபோன்ற சூப்புகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
இதையும் படியுங்கள் : சுவையான காளன் குருமா செய்வது எப்படி ?
ஏனென்றால் கடைகளில் செய்யப்படும் சூப்புகளில் சுவை அதிகமாக இருப்பதற்காக பல வகையான மசாலாக்களை சேர்பார்கள். ஆகையால் உங்கள் வீட்டிலேயே சூப் தயார் செய்து சாப்பிடுங்கள் ஆம் இன்றைக்கு வீட்டிலேயே காளான் சூப் எப்படி தயார் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். பருவ மழை காலங்கள் வேறு ஆரம்பிக்கப் போகிறது ஆகையால் மழை நேரங்களில் சூடாக சாப்பிட இந்த சூப் செய்து பாருங்கள்.
English Overview: mushroom soup is one of the most important soup in india. mushroom soup recipe or mushroom soup seivathu eppadi or mushroom soup recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.
Ingredients
Method
முதலில் காளான் வாங்கும் பொழுது பிரஷான காளானக உள்ளதா என்பதை பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பழைய காளானா என்பதை சரி பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.
வாங்கிய காளானை இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள். பின் ஒரு காளானை நான்கு பீஸ் என வெட்டி அனைத்து காளானையும் இப்படியாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
பின் காடையை அடுப்பில் வைத்து அதில் வெண்ணையை சேர்த்து கொள்ளவும். வெண்ணை உருகி சூடேறியவுடன் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இதனுடன் காளானையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
காளான் மென்மையாக வதங்கியதும், பின் இதனுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனோடு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள்.
ஐந்து நிமிடம் வேக வைத்து கடாயை கீழ இறக்கி கொள்ளுங்கள். பின் காளானுடன் வதக்கிய பொருட்களை ஒரு பவுளில் எடுத்துவிட்டு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து வெணணெய் சேர்த்து கொள்ளவும்.
வெண்ணெய் சூடேறி உருகியதும் மைதா மாவையும் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கலக்கவும். மைதா மாவின் பச்சை வாடை போகும் வரை கிளறிவிட்டு பின் பாலை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
பால் உற்றிய பிறகு கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறிவிட்டு. நாம் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் காளானையும் இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள் பின்பு சூப்பை நன்கு கொதிக்க விட்டு கடாயை இறக்கி விடுங்கள்.
பின் பொடியாக கொத்த மல்லியை வெட்டி சிறிது தூவி விடுங்கள். இப்பொழுது காளான் சூப் இனிதே தயாராகி விட்டது.






