அசைவ பிரியர்களுக்கு மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா முட்டை சுக்கா என்று ஏகப்பட்ட வெரைட்டீஸ் இருக்கு ஆனா சைவ பிரியர்களுக்கு காலிபிளவர் காளான் கிழங்கு வகைகள் இதுல சுக்கா செஞ்சு சாப்பிட்டா தான் ஒரு திருப்தியே கிடைக்கும். அந்த வகையில எல்லாருக்குமே ரொம்ப புடிச்ச காளான் வச்சு ஒரு சூப்பரான காளான் சுக்கா தான் செய்யப் போறோம். இந்த காளான் சுக்கா செய்வதற்கு வீட்ல இருக்குற ரொம்ப குறைவான பொருட்களை போதும் அட்டகாசமான சுவைல காளான் சுக்கா செஞ்சு முடிச்சிடலாம் இந்த காளான் சுக்காவை இட்லி தோசை சப்பாத்தி பூரி கலவை சாதனங்களான லெமன் சாதம் புளி சாதம் தயிர் சாதம் ரசம் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
டேஸ்ட் நீங்க எதிர்பார்க்கும் அளவுக்கு சூப்பராவே வரும் அதுக்கு இந்த மாதிரி செய்முறை இல்ல நீங்க செஞ்சு பாருங்க உங்க குழந்தைகளோட டிபன் பாக்ஸ்க்கு சப்பாத்தி செஞ்சு இந்த மஷ்ரூம் சுக்காவை வச்சு விட்டீங்கன்னா கண்டிப்பா வீட்டுக்கு திரும்பி வரும்போது டிபன் பாக்ஸ்ல காலியாகிட்டு தான் வருவாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும் உங்க குழந்தைகளோட நண்பர்களும் கூட அந்த சுக்காவை வாங்கி சாப்பிட்டு இருப்பாங்க.
அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான மஸ்ரூம் சுக்காவ வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் செஞ்சு கொடுங்க அசைவ பிரியர்களும் சில நேரங்களில் அசைவம் எடுக்க முடியலன்னா சைவத்திலேயே இந்த மாதிரி காளான் சுக்கா செஞ்சு சாப்பிடுங்க அசைவம் சாப்பிட்ட சுவை உங்களுக்கு கிடைக்கும் இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான காளான் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மஷ்ரூம் சுக்கா | Mushroom Sukka Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கி காளான்
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி தழை சிறிதளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போன பிறகு தக்காளியையும் சேர்த்து நன்றாக மசிய வதக்கிக் கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா மல்லித்தூள் மஞ்சள் தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடத்திற்கு வதக்கவும்.
- நறுக்கிய மஸ்ரூம் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும் தண்ணீர் எதுவும் ஊற்ற தேவையில்லை மஷ்ரூமில் இருந்தே தண்ணீர் பிரிந்து வரும்.
- பத்து நிமிடத்திற்கு மஷ்ரூமை வேக வைத்த பிறகு மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் தூவி நன்றாக சுருள வதக்கி எடுத்தால் சுவையான மஷ்ரூம் சுக்கா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை ஸ்டைல் காளான் பிரைட் ரைஸ் ஒரு தரம் இப்படி செய்து பாருங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!