- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Side Dish
மட்டன் வாங்கினால், இப்படி ருசிக்க ருசிக்க மட்டன் ஃப்ரை செய்து ரசம் அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் செமையாக இருக்கும்! வித்தியாசமான முறையில் இவ்வாறு மட்டன் ஃப்ரை செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள்.மட்டன் ஃப்ரை எளிதாக செய்ய இந்த பதிவை பார்ப்போம்.
Ingredients
Method
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.
மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.சுவையான மட்டன் ட்ரை ஃப்ரை தயார்.






