- Advertisement -
மட்டன் வடை – ரம்ஜான் ஸ்பெஷல்.ஆரோக்கியம் நிறைந்த மொறு மொறு மட்டன் வடை.வடைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் இந்த அசைவ வடை மிகவும் ருசியாக இருக்கும். மட்டன் வடை நேர்த்தியாக இதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்! ரொம்பவே சுலபமாக மட்டன் வடை ரெசிபி எப்படி தயார் செய்வது? என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.
-விளம்பரம்-
வெளிப்புறத்தில் கிரிஸ்பியாக உட்புறத்தில் மிருதுவாக சூப்பரான சுவையில் இருக்கும் இந்த மட்டன் வடை நம் வீட்டிலேயே கொஞ்சம் பொருட்களை வைத்து சுலபமாக செய்து அசத்தலாமே! செய்வது எப்படி? மட்டன் வடைஎப்படி செய்வதுஎன்பதைத் தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.
- Advertisement -
மட்டன் வடை | Mutton Vadai Recipe In Tamil
மட்டன் வடை – ரம்ஜான் ஸ்பெஷல்.ஆரோக்கியம் நிறைந்த மொறு மொறு மட்டன் வடை. வடைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் இந்த அசைவ வடை மிகவும் ருசியாக இருக்கும். மட்டன் வடை நேர்த்தியாக இதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்! ரொம்பவே சுலபமாக மட்டன் வடை ரெசிபி எப்படி தயார் செய்வது? என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க. வெளிப்புறத்தில் கிரிஸ்பியாக உட்புறத்தில் மிருதுவாக சூப்பரான சுவையில் இருக்கும் இந்த மட்டன் வடை நம் வீட்டிலேயே கொஞ்சம் பொருட்களை வைத்து சுலபமாக செய்து அசத்தலாமே! செய்வது எப்படி? மட்டன் வடை எப்படி செய்வதுஎன்பதைத் தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.
Yield: 5 People
Calories: 375kcal
Equipment
- 1 வாணலி
- 1 பெரிய பவுல்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் மட்டன்
- 2 1/2 tsp சீரகம்
- 1 tsp மிளகு
- உப்பு தேவையான அளவு
- 1/4 கப் பொட்டுக்கடலை மாவு
- நல்லெண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மட்டனை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
- மட்டன் நன்கு வெந்த பின்னர், மட்டனில் தண்ணீர் அதிகம் இருந்தால், தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
- பின்பு வெந்த மட்டனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலை மாவை சேர்த்து வடை தாயும் பதத்திற்கு பிசைந்து தனியாக வைக்கவேண்டும்
- இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததம், அரைத்து வைத்துள்ள மட்டனை வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் வடை ரெடி.
Nutrition
Serving: 100g | Calories: 375kcal | Carbohydrates: 48.86g | Protein: 10.22g | Fat: 8.79g
இதையும் படியுங்கள் : ருசியான டீக்கடை கொத்தமல்லி வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!