சட்டுனு ரெடி பண்ண கூடிய சூப்பர் தோசை ரெசிபி, மைசூர் மசாலா தோசை
மசாலா தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது. உணவு பிரியர்கள் மத்தியிலும் இதற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. மசாலா தோசை பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களால் செய்து சுவைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை
இதையும் படியுங்கள்: இட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவை மைசூர் மசாலா தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மைசூர் மசாலா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மைசூர் மசாலா தோசை | mysoor Masala Dosai Receipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 cup தோசை மாவு
- 3 tbsp நெய்
- 1 tbsp இட்லி பொடி
உருளை ஸ்டப்பிங் செய்ய
- 1 உருளை கிழங்கு
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 4 பச்சை மிளகாய்
- 1 tsp சாம்பார் பொடி
- ½ tsp மஞ்சள்தூள்
- 20 gm கொத்தமல்லி இலை
- தேவையான அளவு உப்பு
தாளிக்க
- ½ tsp கடுகு, சீரகம்
- 1 tsp உளுந்து
- 1 tsp கடலைபருப்பு
- 3 சிகப்பு மிளகாய்
- 20 கறிவேப்பிலை
தக்காளி சட்னி:
- 1 பல்லாரி வெங்காயம்
- ½ tsp மிளகு,சீரகம், உளுந்து, கடலைபருப்பு
- 4 பூண்டு
- ¼ tsp கடுகு
- 2 tbsp ந.எண்ணெய்
செய்முறை
உருளை ஸ்டப்பிங் செய்முறை:
- முதலில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.
- நீட்டமாக நறுக்கிய பல்லாரி வெங்காயத்தினை சேர்க்கவும். அதில் நறுக்கிய தக்காளி பொடியாக நறுக்கிய பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பிறகு மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து சிறுது வதக்கவும். பச்ச வாசனை போன பின்பு அதில் மசித்த உருளை சேர்த்து கிளரி 5-7நிமிடம் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தக்காளி சட்னி செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து விட்டு மேல் சொன்ன பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக குறைந்த தனலில் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
மசாலா தோசை செய்முறை:
- தோசை தவாவில் மெலிசாக, பரவலாக தோசை ஊற்றவும். மேலே சுற்றி வரை நெய்/எண்ணெய் சிறுது ஊற்றவும்.
- 2நிமிடங்கள் கழித்து அதன் மேல் பரவலாக தக்காளி சட்னி தேய்க்கவும் அதன் மீது இட்லி பொடி சிறுது தூவி அதன் மேல் உருளை ஸ்டப்பிங் பரவலாக வைத்து மேலே சிறுது எண்ணெய் ஊற்றி முக்கோண வடிவில் மூடிவிடவும்..