- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 21 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
நண்டு இது அதிக சூட்டை அதிகரிக்கும் அதனால் மழை காலங்கள், அல்லது குளிர் காலங்களில் செய்து சாப்பிட்டால் இதமாக இருக்கும். நண்டில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆகையால் இது போன்று ஒரு முறை காரசாரமான நண்டு மசாலாவை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் நண்டு பிடிக்காதவர்கள்
இதையும் படியுங்கள் : காரசாரமான செட்டிநாடு நண்டு கிரேவி செய்வது எப்படி ?
கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் உங்களை இது போல் நண்டு மசாலா செய்ய சொல்லி உங்களை வற்புறுத்துவார்கள். அதனால் இன்று மிகவும் காரசாரமான சுவையில் நண்டு மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் வெங்காயம் தக்காளி நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு தேங்காய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, மிளகாய், ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து அரைக்கவும்.
அடுத்து கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இரண்டையும் நன்கு வதக்கி சுத்தம் செய்த நண்டுகளை அதில் சேர்த்து அதில் அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வேகவிடவும்.
வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். இப்பொழுது சுவையான நண்டு மசாலா தயார்.






