- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
பன்னீர் வச்சு செய்யக்கூடிய ரெசிபி பேச நிறையவே இருக்கு பன்னீர் 65, பன்னீர் பிரியாணி, பன்னீர் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ஒரு சூப்பர் ஸ்பெஷலான நவாபி பன்னீர் தான் பாக்க போறோம். இந்த ஸ்பெஷல் ஆன நவாபி பன்னீர் இட்லி தோசை சப்பாத்தி பூரி நான் ஃபுல்கா அப்படின்னா எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். இனிமேல் நவாபி பன்னீர் சாப்பிடணும் அப்படின்னா பெரிய ரெஸ்டாரண்டுக்கு போகணும் அப்படின்ற அவசியம் கிடையாது வீட்டில் ஹோட்டலில் கிடைக்கிற மாதிரியான டேஸ்ல செய்ய முடியும். டேஸ்ட் ரொம்ப ரொம்ப அருமையாக வரும்.
உங்க குழந்தைகளுக்கு இந்த மாதிரி டிஃபரண்டா செஞ்சு கொடுத்தீங்கன்னா அவங்களும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த நவாபி பன்னீர் செஞ்சு கூடவே சப்பாத்தி வச்சு குழந்தைங்களோட லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடுங்க விரும்பி சாப்டுட்டு டிபன் பாக்ஸ் காலியாதான் கொண்டு வருவாங்க. இந்த நவாபி பன்னீர் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி தான் ரொம்ப கஷ்டமான வேலை எல்லாம் கிடையாது. நம்ம வீட்ல இருக்க கூடிய பொருட்களை வச்சே செய்யலாம் இந்த நவாபி பன்னீர் செய்வதற்கு வீட்டிலேயே செஞ்ச பன்னீர் இருந்தா இன்னும் சூப்பராக இருக்கும். இப்ப வாங்க இந்த ஸ்பெஷலான நவாபி பன்னீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான ஹைதராபாத்தி பன்னீர் மசாலா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மீதமிருக்காது!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மெல்லியதாக நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் ஆன பிறகு இறக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் முந்திரி பருப்பு பால் தயிர் தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளித்ததும் இரண்டு தக்காளியை மிக்ஸி ஜாரில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
தக்காளியின் பச்சை வாசனை போன பிறகு அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் மல்லி தூள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
பன்னீரை தேவையான வடிவத்திற்கு வெட்டி பட்டரில் லேசாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது கிரேவி எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அதில் கஸ்தூரி மேத்தி சேர்த்து பன்னீர் துண்டுகளை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு பிறகு இறக்கினால் சுவையான நவாபி பன்னீர் தயார்.






