சுவையான நேந்திர வாழைப்பழ பாயாசம் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! நாவில் எச்சி ஊறும்!
பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறைந்த விலையில் நிறைய ஊட்ச்சத்துகளை கொண்டது
பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறைந்த விலையில் நிறைய ஊட்ச்சத்துகளை கொண்டது இந்தப் பழம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய பழம். எளிதாக கிடைக்க கூடிய பழம். வாழைப்பழத்தை தோல் உரித்து அப்படியே சாப்பிடலாம். இருப்பினும் இதை வைத்து சுவையான ரெசிபிகளும் செய்து சாப்பிடலாம். அந்தவகையில் நேந்திரம் வாழைப்பழ பாயாசம் செய்வது குறித்து பார்க்கலாம்.
நேந்திரம் பழம், வெல்லம் மற்றும் தேங்காய்ப்பால் கொண்ட சுவையான இனிப்பு. விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு சுலபமாக செய்யக்கூடிய பாயாசம். இந்த பாயாசம் கேரளாவில் பிரபலமான இனிப்பு. கேரளா மற்றும் நாகர்கோவிலில் நேந்திரம் பழம் பெரும்பாலும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.