- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
நெத்திலி மீன் வச்சு குழம்பு செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க குட்டி குட்டியா அழகா இருக்குற அந்த மீன் வச்சு குழம்பு மட்டும் வைக்காம இந்த மாதிரி ஒரு தடவை 65 செஞ்சு பாருங்க. அதுவும் மசாலா பிரியாம நல்லா மொறு மொறுன்னு இதே செய்முறையில் செஞ்சு பாத்தீங்கன்னா அவ்வளவு ருசியா இருக்கும். எப்பவுமே நம்ம மீன் குழம்பு மீன் வறுவல் ரசம் அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிடாம ஒரே ஒரு தடவை நெத்திலி மீன் எடுத்து ரசம் வச்சு அதுக்கு சைட் டிஷ்ஷா நெத்திலி 65 வச்சு சாப்பிட்டு பாருங்க. ருசி தாறுமாறா இருக்கும். சாப்பிட்டு அசந்து போயிடுவீங்க அந்த அளவுக்கு ருசி வேற லெவல்ல இருக்கும்.
இந்த டேஸ்டான ருசியான நெத்திலி 65 ரெசிபி செய்யறது ரொம்ப ரொம்ப ஈஸி. நல்லா அரை மணி நேரம் மசாலா தடவி ஊறவைத்து அதுக்கப்புறம் பொரிச்சு எடுத்தா வாசனையிலேயே எல்லாரும் தட்டு எடுத்துட்டு வந்துருவாங்க. ஒரு நாள் வேற ஏதாவது மீன் வாங்கி மீன் குழம்பு வச்சு அதுக்கு சைட் டிஷ் ஆக அதையும் மீன் பொரிக்காமல் இந்த நெத்திலி 65 செஞ்சு பாருங்க. சாப்பிடுறதுக்கே மொறு மொறுன்னு அவ்ளோ ருசியா இருக்கும். இத சாப்பாட்டுக்கூட வச்சு சாப்பிடுவதற்கு மட்டுமில்லாம தனியா சாப்பிடுறதுக்கே அவ்வளவு ருசியா மொறு மொறுன்னு இருக்கும்.
இதுல வெறும் ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு மட்டும் தான் சேர்க்க போறோம் அதுக்கே வேற லெவல் டேஸ்ல இருக்கும். ஒரு தடவை இந்த ரெசிபியை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா இதே மாதிரி செய்முறையில் தான் செய்வீங்க. வீட்டுக்கு யாராவது விருந்துக்கு வராங்க அப்படின்னா அவங்களுக்கு இந்த நெத்திலி 65வை உங்க மெனுவில் சேர்த்துக்கோங்க. ருசி ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா யாருமே வேணான்னு சொல்ல மாட்டாங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான நெத்திலி 65 ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை நெத்திலி வாங்கினால் நெத்திலி மீன் வருவல் இந்த மாதிரி சிம்பிளான முறையில் பொறிச்சு பாருங்க!!
Ingredients
Method
நெத்திலி மீனை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா, மிளகுத்தூள் சீரகத்தூள் இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.
முட்டையின் வெள்ளைக்கரு அரிசி மாவு, சோள மாவு சேர்த்து உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
நெத்திலி மீனை அதில் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நெத்திலி மீனை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான நெத்திலி 65 தயார்.






