நாம் நம் வாழ்க்கையில் ஒரு சில பொருட்களை எழுந்திருப்போம் பணம் சொத்து உறவினர்கள் வேலை என பலவற்றை இழந்து தவிப்போம் அப்படி இழந்து தவிப்பவர்கள் முருகப்பெருமானை நினைத்து 21 நாட்கள் இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை செய்து வருவதால் நீங்கள் எழுந்ததை மீண்டும் பெற முடியும் நீங்கள் கேட்டது கிடைக்கும் அதற்கு நாம் செய்ய வேண்டியது முருகனே நினைத்து ஒரு மந்திரத்தை எழுதுவது அந்த மந்திரம் நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றும் அதனைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்
வேல் வழிபாடு

ஒரு சிலர் வீட்டில் முருகப் பெருமானுடைய வேல் வைத்திருப்பார்கள் அப்படி வைத்திருந்தால் வேலை நன்கு வழிபாடு செய்து கொண்டு மந்திரத்தை எழுதலாம் வேல் இல்லை என்றால் முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முன்பாக இந்த ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை எழுதலாம் வேல் இருப்பவர்கள் 21 நாட்கள் கணக்கு வைத்து ஒரு நாள் கூட விடாமல் சூரிய உதயத்திற்கு முன்பாக வெயிலுக்கு அபிஷேகம் செய்து பூஜை அறையில் வைத்து வாழைப்பழம் கல்கண்டு பொங்கல் என ஏதாவது ஒன்றை நெய்வேதியமாக வைத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
இழந்தது கிடைக்க எழுத வேண்டிய மந்திரம்
ஒரு புது நோட்டு புத்தகத்தை எடுத்து அதனை பூஜை அறையில் வைத்து வேலுக்கு முன்பாக அமர்ந்து முருக பெருமானிடம் நீங்கள் இழந்ததை கூறி உங்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த நோட்டுப் புத்தகத்தில் “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று ஒன்பது முறை எழுதி வேலைக்கு கற்பூர தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும்.
சிறிய வேல்

ஒருவேளை வீட்டில் வேலை இல்லை என்றால் முருகன் திருவுருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த வழிபாட்டை செய்யலாம். அப்படி இல்லை என்றால் புது வேல் வாங்கி வைத்து இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு அந்த வேலை முருகன் கோவில் உண்டியலில் போட்டு விடலாம். அவரவர் வசதிக்கேற்ப பித்தளையில் செய்யப்பட்ட வெயில் கூட வாங்கி இந்த வழிபாட்டை செய்யலாம் முருகப்பெருமானின் முன்பு நம்பிக்கையோடு அமர்ந்த இந்த வழிபாட்டை செய்தால் அதற்கான பலன்கள் நிச்சயமாக கிடைக்கும் 21 நாட்கள் மட்டும் தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்கள் என யார் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.




