- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நண்டு சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது நண்டு ஒரு சிலருக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா பிடிக்காது ஆனா இந்த மாதிரி ஒரு தடவை நண்டு வச்சு சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் குழம்பு செஞ்சு பாருங்க கண்டிப்பா நண்டு சாப்பிடாதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க. நண்டு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். நண்டு வச்சு நண்டு ரசம் நண்டு ஆம்லெட் நண்டு கிரேவி எல்லாமே செய்யலாம் எல்லாமே அட்டகாசமா இருக்கும். ஆனா இந்த குழம்பு சாதத்துக்கு இட்லிக்கு தோசைக்கு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும்.
ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். பிரெஷா மசாலா அரைச்சு செய்ய போறோம் அதனால வீட்டை கம கமன்னு இருக்கும். சுட சுட சாதத்துல இது குழம்பு ஊத்தி சாப்பிடுறதுக்கு அவ்ளோ ருசியா இருக்கும். உங்க வீட்டில அம்மிக்கல் இல்லனா ஆட்டுக்கல் இருந்துச்சுன்னா அதுல மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் இல்லாதவங்க மிக்ஸி ஜார்ல மசாலா அரைச்சுக்கலாம். இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
கண்டிப்பா அடுத்த தடவை நீங்களே செஞ்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு வீட்ல இருக்குற எல்லாரும் அடிமையாகிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் மட்டன் மீன் அப்படின்னு செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி நண்டு வாங்கி நண்டு குழம்பு செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்டுட்டு உங்களை பாராட்டாமல் போகவே மாட்டாங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான நண்டு குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு இறால் தொக்கு
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய், மல்லி விதைகள், சீரகம், மிளகு சேர்த்து வதக்கவும்.
பிறகு சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
ஒரு கொத்து கருவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கி தேங்காய் துருவலையும் வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு பச்சை மிளகாய் நான்கு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்த விழுது சேர்த்து குழம்பு மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
சுத்தம் செய்துள்ள நண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான நண்டு குழம்பு செட்டிநாடு ஸ்டைலில் தயார்.






