- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நம்ம எப்பவுமே சிக்கன் எடுத்தா அதை வச்சு சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் பிரட்டல் இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா எப்பவும் இதே மாதிரி செய்யாம ஒரு தடவை சூப்பரான கோழி மிளகு சாறு ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்க வீட்ல இருக்கிற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சளி இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மிளகுத்தூள் இன்னும் கொஞ்சம் அதிகமா சேர்த்து இந்த சூப்பரான கோழி மிளகு சாறு சாப்பிட்டு பாருங்க.
சளி இருமல் எல்லாமே பறந்து போயிடும். சுட சுட சாதத்துல இந்த கோழி மிளகு சாறு ஊத்தி சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். சீரகமும் மிளகும் நல்ல வறுத்து அரைச்சு சேர்க்கும்போது அதோட வாசனையும் அவ்ளோ மணமாக இருக்கும். கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவை இதை சமைச்சு பாருங்க சளி இருமல் போன்ற பிரச்சனைகள் வந்துச்சுனா கடையில் போய் சூப் வாங்கி குடிக்காமல் இந்த மாதிரி சிக்கன் வாங்கி வீட்டிலேயே சூப்பரா கோழி மிளகு சாறு செஞ்சு குடிச்சு பாருங்க.
காரசாரமா புளிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வீட்ல இருக்குற சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இதை கொடுக்கலாம். சாதம் போட்டு இந்த சாறு மிதக்க மிதக்க சாப்பிடும்போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். உங்களுக்கு பிடிக்கும் அப்படின்னா இதுல நல்லெண்ணெய் கூட ஊத்தி குடிக்கலாம். ரொம்ப ரொம்ப சத்தான ரெசிபியும் கூட. கடைசியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் அவ்வளவு சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கோழி மிளகு சாறு ரெசிப்பி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்த முறை சிக்கன் எடுத்தா ஒரு தடவை பாட்டி கோழிக்கறி செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்!!
Ingredients
Method
ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து தட்டிய பூண்டு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மசிய வதக்கவும்.
கழுவி வைத்துள்ள சிக்கன் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பத்து நிமிடம் கிளறி அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு கப் தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சீரகம் மிளகு சேர்த்து வறுத்து ஆறவைத்து அரைத்து எடுத்து அந்த பொடியையும் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கோழி மிளகு சாறு தயார்.






