- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
முட்டையை பல்வேறு ஆரோக்கியமான மற்றும் சுவையான சமையல் குறிப்புகளில் பயன்படுத்தலாம். இந்த மலாய் முட்டை கறி எளிமையான மற்றும் சுவையான உணவு நீங்கள் முட்டைகளை விரும்பினால் இந்த செய்முறை உங்களுக்கானது. மலாய் முட்டை கறி செய்வது இலகுவாக இருப்பதால் மதியம் மற்றும் இரவு நேரத்திற்கு மிகவும் ஏற்றது மசாலா பொருட்களால்
இதையும் படியுங்கள் : கறிக்குழம்பையும் மிஞ்சும் சுவையில் காரைக்குடி முட்டை குழம்பு இப்படி செய்து பாருங்க!
செய்யப்பட்ட இந்த மலாய் முட்டை கறி அதன் நறுமணச் சுவையால் உங்கள் இதயத்தை வெல்லும். இது மிகவும் சுவையான மற்றும் நிறைவான உணவாகும் இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து அசத்தலாம். இந்த பதிவில் எப்படி மலாய் முட்டை கழிவு கறி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
Ingredients
Method
முட்டையை வேக வைத்து ஓடெடுத்து பாதியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, எல்லாம் சேர்த்து நன்கு பிரட்டவும்.
பின்னர் பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்கு மசித்து வதக்கவும்.
மசாலா நன்கு வதங்கிய பின் சிறிது தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.
கடைசியாக மீதமுள்ள தேங்காய பால் சேர்த்து கொதி வர துவங்கியதும் எடுக்கவும்.






