- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- snacks
மட்டன் வச்சு மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி, மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா இன்னைக்கு நம்ம மட்டன் வச்சு ஒரு சூப்பரான மட்டன் கறி வடை செய்ய போறோம். இப்போ நோன்பு நடந்துட்டு இருக்க சமயத்துல கண்டிப்பா ஏதாவது டிஃபரண்டான ரெசிபீஸ் தேடிட்டு இருப்பீங்க அப்படி தேடிட்டு இருந்தீங்கன்னா இந்த கறி வடைய நோன்புக்கு ட்ரை பண்ணி பாருங்க. சாப்பிட்டுட்டு மன திருப்தியோட இருப்பீங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும். இந்த கறி வடைக்கு பீஃப் கூட நம்ம பயன்படுத்தலாம். சிக்கன் கூட வேணும்னா யூஸ் பண்ணிக்கோங்க ஆனா மட்டன்ல செய்றப்பதான் டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
இதுகூட வித்தியாசமாக துவரம் பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு வேகவைத்து சேர்க்கறதால சுவை கூடுதலாக இருக்கும். வீட்ல சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு முட்டை குழம்பு இதெல்லாம் செய்யும்போது சைடு டிஷ்ஷா இந்த வடை வச்சு சாப்பிட்டு பாருங்க செம டேஸ்டா இருக்கும். உங்களுக்குப் பிடிச்ச யாராவது வீட்டுக்கு வந்தாங்கன்னா அவங்களுக்கு ஸ்நாக்ஸ்க்கு இந்த ரெசிபிய செஞ்சி கொடுக்கலாம். கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க.
பாரம்பரியமான இந்த கறி வடைய இதே செய்முறையில் செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும் இதுக்கு பட்டை ஏலக்காய் மட்டும் பொடியாக்கி சேர்த்தால் போதும் ஏலக்காய் கொஞ்சம் அதிகமா சேர்த்தால் டேஸ்ட் சூப்பரா இருக்கும். இந்த வடைக்கு ரெடி பண்ணும் போது அந்த கலவை கொஞ்சம் கெட்டியா இருக்கணும் அந்த அளவுக்கு நீங்க அடுப்புல வச்சு நல்லா சுருள வதக்கிக்கோங்க. தண்ணியா இருந்தா வடை பிரிஞ்சு வந்துடும். இப்ப வாங்க இந்த சுவையான மட்டன் கறி வடை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு மிளகு வடை
Ingredients
Method
ஒரு குக்கரில் மட்டன் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது குழம்பு மிளகாய் தூள் தயிர் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
சிறிதளவு தண்ணீர் இருந்தால் கூட அதனை வற்றவைத்து எடுக்கவும். துவரம் பருப்பு மற்றும் உருளைக்கிழங்கை மசிய வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு முட்டை உடைத்து ஊற்றி பட்டை மற்றும் ஏலக்காயை பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்.
அனைத்தையும் கெட்டியாக பிசைந்து தட்டி வடை போல் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கறி வடை தயார்.






