நிறைய காய்கறிகள் நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் நிறைய காய்கறிகள் நமக்கு சுத்தமா தெரிந்து இருக்காது. அந்த வகையில் ஒரு சிலருக்கு நூக்கல் அப்படி என்ற ஒரு காய் இருப்பது தெரியவே தெரியாது. ஒரு சிலர் இந்த நூக்கல் வைத்து சாம்பார் வைத்து சாப்பிடுவாங்க டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். ஆனா ஒரு சிலருக்கு இந்த நூக்கல் சுத்தமா பிடிக்காது அந்த நூக்கல் வைத்து என்ன செய்தாலும் சுத்தமாகவே பிடிக்காது. அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு நூக்கல் வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் ரெசிப்பி செஞ்சு கொடுங்க.
இந்த துவையல் ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்ப ரொம்ப ருசியா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு கொஞ்சமா நெய் இல்லனா நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த நூக்கல் துவையல் ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே வீட்ல செஞ்சு பாக்கனும். நூக்கலில் நிறைய ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்திருக்கு. ஆரோக்கியமான இந்த காய்கறிய கண்டிப்பா ஏதாவது ஒரு விதத்துல நம்ம சாப்பிடணும். அந்த வகையில இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
இது சாதத்துக்கு மட்டுமில்லாம பழைய சாதம், சுடு கஞ்சி, இட்லி தோசை எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். நீங்க கலவை சாதங்களான புளி சாதம் லெமன் சாதம் தக்காளி சாதம் செஞ்சீங்கன்னா அதுக்கு சைட் டிஷா கூட இந்த நூக்கல் துவையல சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம நூக்கல் துவையலில் சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம் டேஸ்ட் ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கும். அற்புதமான இந்த துவையலை கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. சாப்டுட்டு டேஸ்ட்ல அசந்து போயிடுவீங்க. இப்ப வாங்க இந்த சுவையான நூக்கல் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நூக்கல் துவையல் | Noolkol Thuvayal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 நூக்கல்
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 5 பல் பூண்டு
- 8 வர மிளகாய்
- 1 துண்டு புளி
- 15 சின்ன வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு, பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- தோல் சீவி பொடியாக நறுக்கிய நூக்கல் சேர்த்து நன்றாக வதக்கியதும் தேங்காய் துருவல் புளி கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் ஆற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலில் சேர்த்து விட்டால் சுவையான நூக்கல் துவையல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கொத்தமல்லி துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!