- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான ஒன் பாட் புளி சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களுக்கு மதியம் என்ன சாதம் செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் புளி இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான சாதம் செய்யுங்கள். இந்த புளி சாதம் ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் புளி சாதம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இந்த சாதத்துடன் உருளைக்கிழங்கு வறுவல், ஏதாவது கிரேவி சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
அதோடு ஆரோக்கியமானதும் கூட. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த புளி சாதம் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும். அடுத்தமுறை உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள். குழந்தை பிறந்தவர்களுக்கு மதியம் சூடான இந்த சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து குடுத்தால் நல்லது. இப்போது இந்த ஒன் பாட் புளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஒன் பாட் சிக்கன் குழம்பு இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்ததும் வெங்காயம் மற்றும் பூண்டை இடித்து சேர்த்து வதக்கவும்.
பின் வேர்க்கடலை, பெருக, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு புளியை நன்கு கரைத்து சேர்த்து அதனுடன் உப்பு, நாம் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.
அதன்பிறகு அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஒன் பாட் புளி சாதம் தயார்.






