- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
சின்ன வெங்காயமும் கருவேப்பிலையும் வச்சு இந்த மாதிரி ஒரு துவையல் இதுவரைக்கும் நீங்க செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க. கருவேப்பிலை துவையல் தனியா செஞ்சி இருக்கீங்களா சின்ன வெங்காயம் சட்னி செஞ்சுருப்பீங்க ஆனா இது இரண்டையும் சேர்த்து ஒரு தடவை இந்த மாதிரி துவையல் செஞ்சு பாருங்க கண்டிப்பா ரொம்ப பிடிக்கும். சாதத்துக்கு சூப்பரான காமினேஷனா இருக்கும். மேலும் இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்குமே சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரெண்டு மூணு இட்லி சேர்த்து கூட சாப்பிட வாங்க அந்த அளவுக்கு சுவையாக இருக்கும்.
சின்ன வெங்காயம் பொதுவா எந்த ரெசிபியில் சேர்த்தாலும் சுவை அதிகமாக இருக்கும். அதே சமயத்துல சின்ன வெங்காயம் அதிகமாக உணவுல சேர்த்துகிறதால நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கருவேப்பிலையும் உணவுல சேர்த்துக்கொள்வதால் உடம்புல இரும்புச்சத்து குறைபாடு வரவே வராது. அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான பொருட்களை வச்சு செய்யப் போற இந்த துவையல் டேஸ்ட்லயும் அட்டகாசமா இருக்கும். இந்த ரெசிபிக்கு நீங்க நல்லெண்ணெய் ஊத்தி செஞ்சு பாருங்க இன்னும் சுவை கூடுதலாக இருக்கும். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான சின்ன வெங்காய கருவேப்பிலை துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாட்டுக்கோழி கறிவேப்பிலை கிரேவி
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு புளி சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான சின்ன வெங்காய கருவேப்பிலை துவையல் தயார்.






