கிராமத்து ஸ்டைல் வெங்காய பூண்டு குழம்பு நிமிடங்களில் இப்படி செய்து பாருங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்றே தெரியாது!!

- Advertisement -

இன்று நாம் சின்ன வெங்காயத்தை வைத்து வித்தியாசமான மற்றும் கிராமத்து சுவையில் வெங்காய பூண்டு குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த சின்ன வெங்காய பூண்டு குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுடைய வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றாலும், பரவாயில்லை. பத்து பதினைந்து பல் சின்ன வெங்காயத்தை வைத்து இந்த குழம்பை வைத்து பாருங்கள்.

-விளம்பரம்-

சின்ன வெங்காயம் எனப்படுகிற சாம்பார் வெங்காயம், நம் உடலுக்கு தேவையான ஒரு முக்கிய உணவுப் பொருள். சின்ன வெங்காயத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். வைட்டமின் சி, வைட்டமின் கே, தியாமின், நியாசின், ஃபோலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களுடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். சின்ன வெங்காயம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

- Advertisement -

சின்ன வெங்காயத்தை சாம்பாரில் இணைத்துச் சாப்பிடுவது, பச்சையாக சாப்பிடுவது என பயன்படுத்துவோம். அதேபோல சின்ன வெங்காயம் பூண்டு குழம்பு வைத்துப் பாருங்கள்! இதன் நன்மைகளும் அதிகம்; டேஸ்டியாகவும் இருக்கும். இந்த சின்ன வெங்காய கிரேவி சாப்பிட்டால் அது அரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால் இன்று சின்ன வெங்காய பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

வெங்காய பூண்டு குழம்பு | Onion Garlic Curry Recipe In Tamil

இன்று நாம் சின்ன வெங்காயத்தை வைத்து வித்தியாசமான மற்றும் கிராமத்து சுவையில் வெங்காய பூண்டு குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த சின்ன வெங்காய பூண்டு குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுடைய வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றாலும், பரவாயில்லை. பத்து பதினைந்து பல் சின்ன வெங்காயத்தை வைத்து இந்த குழம்பை வைத்து பாருங்கள். சின்ன வெங்காயத்தை சாம்பாரில் இணைத்துச் சாப்பிடுவது, பச்சையாக சாப்பிடுவது என பயன்படுத்துவோம். அதேபோல சின்ன வெங்காயம் பூண்டு குழம்பு வைத்துப் பாருங்கள்! இதன் நன்மைகளும் அதிகம்; டேஸ்டியாகவும் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Onion Garlic Curry
Yield: 4 People
Calories: 145kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மண் சட்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 15 சுண்டக்காய் வத்தல்
  • 1/2 கப் பூண்டு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/4 கப் புளி கரைசல்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெயை விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் சுண்டக்காய் வத்தல் சேர்த்து லேசாக வதக்கவும். வத்தல் வதங்கியதும் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  • பின் புளிக்கரைசல் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் சாம்பார் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து கலந்து, குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கிராமத்து ஸ்டைல் வெங்காய பூண்டு குழம்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 145kcal | Carbohydrates: 4.5g | Protein: 12g | Fat: 3.2g | Sodium: 59mg | Potassium: 401mg | Fiber: 24g | Vitamin A: 47.9IU | Vitamin C: 201mg | Calcium: 181mg | Iron: 29mg

இதனையும் படியுங்கள் : நாவில் எச்சில் ஊற வைக்கும் வெங்காய கொஸ்து ரெசிபியை இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!!!