- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner
சிக்கன் குருமா மட்டன் குருமா, உருளைக்கிழங்கு குருமா சோயா குருமா அப்படின்னு நிறைய குருமா ரெசிபி செஞ்சிருப்பீங்க. அந்த வகையில வீட்ல எந்த காய்கறியுமே இல்ல அப்படின்னா இந்த ருசியான டேஸ்டான வெங்காயம் வச்சு செய்யக்கூடிய வெங்காய குருமா செஞ்சு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னா எல்லாத்துக்கும் ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் ஆக இருக்கும். சுட சுட கல் தோசை ஊத்தி அதுக்கு சைடு டிஷ் ஆக இந்த ரெசிபியை தொட்டு சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும் பத்து தோசை கூட சாப்பிடலாம்.
இட்லிக்கும் அப்படித்தான் கணக்கில்லாமல் இட்லி சாப்பிட்டுகிட்டே இருக்கலாம் அந்த அளவுக்கு இந்த வெங்காய குருமா ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு செய்யப்போறோம். அந்த மசாலா தான் இந்த ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப சூப்பரான வாசனையை கொடுக்கக் கூடியது இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் இத பிடிச்சு கேட்டு வாங்க சாப்பிடுவாங்க. ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இதை நீங்க செய்வீங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும்.
இதுக்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை போதுமானது தான் அத வச்சு இந்த சூப்பரான குருமா ரெசிபியை செஞ்சு முடிக்கலாம் சப்பாத்தி பூரிக்கு ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். இந்த குரு மாவை நல்லா கெட்டியா வச்சா தான் சாப்பிட நல்லா இருக்கும் தண்ணியா வைக்கக்கூடாது. கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் கமகமன்னு வீடு மணக்கும். இந்த ருசியான வாசனையான வெங்காய குருமா ரெசிப்பியா கண்டிப்பா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான வெங்காய குருமா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோழி குருமா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு,பட்டை,கிராம்பு, ஏலக்காய்,நட்சத்திர சோம்பு, முந்திரிப் பருப்பு கசகசா, பொட்டுக்கடலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு, ஒரு பெரிய வெங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு டீஸ்பூன் சோம்பு, கடுகு உளுந்தம் பருப்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
நீளவாக்கில் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து தனியா தூள் சேர்த்து புதினா இலைகள் சேர்த்து வதக்கவும்.
அரைத்து வைத்த விழுதை சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான வெங்காய குருமா தயார்.






