Advertisement
சைவம்

வாய்க்கு ருசியான வெங்காய மசாலா கறி செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் மிகவும் எளிமையான முறையில் சில பொருட்களை வைத்து அவசர காலத்தில் நமக்கு கை கொடுக்கும் வகையில் வெங்காய மசாலா கறி தான் செய்து பார்க்க போகிறோம். இது உங்களுக்கு மதிய உணவுக்கு சோறுடன் சாப்பிடுவதற்கும் மற்றும் காலையில் பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற டிபன் வகை உணவுகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : சக்கரை நோயை கட்டுபடுத்தும் வெங்காயம் எப்படி தெரியுமா ?

Advertisement

இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு நாள் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் அந்த அளவிற்கு இந்த வெங்காய மசாலா கறி அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று வெங்காய மசாலா கறி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வெங்காய் மசாலா கறி | Onion Masala Kari Recipe in Tamil

Print Recipe
இது உங்களுக்கு மதிய உணவுக்கு சோறுடன் சாப்பிடுவதற்கும் மற்றும் காலையில் பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற டிபன் வகை உணவுகளுக்கும் ஏற்றதாக இருக்கும். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு நாள் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் அந்த அளவிற்கு இந்த வெங்காய மசாலா கறி அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword onion, வெங்காயம்
Prep Time 10 minutes
Cook Time
Advertisement
20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 152

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

மசாலா அரைக்க

  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 tbsp சோம்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 4 மிளகாய்
  • 6 tbsp துருவிய தேங்காய்
  • 4 சின்ன வெங்காயம்
  • ¼ tbsp மஞ்சள் தூள்

மசாலா கறி செய்ய

  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • ½ டம்பளர் தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கைப்பிடி கொத்த மல்லி

Instructions

  • முதலில் தேவைப்படும் நான்கு பெரிய வெங்காயம், தக்காளி போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில்
    Advertisement
    பட்டை, கிராம்பு, சோம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய், துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் மற்றும் கடைசியில் மஞ்சள் தூள் போன்ற பொருள்களை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • பின் கடுகு பொரிந்து வந்தவுடன் இதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • பின் தக்காளி நன்கு வெந்து மசிந்து வரும் பொழுது நாம் மிக்ஸியில் அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொள்ளுங்கள் பின் ஒரு இரண்டு நிமிடம் கழித்து ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளை தூவி மீண்டும் ஒரு இரண்டு நிமிடம் நன்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து பின் பரிமாறுங்கள். அவ்வளவுதான் சுவையான வெங்காய மசாலா கறி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 400gram | Calories: 152kcal | Carbohydrates: 9g | Protein: 1g | Fat: 0.6g | Saturated Fat: 0.1g | Sodium: 14mg | Potassium: 629mg | Fiber: 36g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

1 மணி நேரம் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

11 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

11 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

13 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

17 மணி நேரங்கள் ago