நமது கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படும். பெரும்பாலும் சர்க்கரை நோய் வருவதற்கான காரணம் மரபு ரீதியாக தான் வருவதற்கான ஆம் உங்களது முந்தைய தலைமுறைகள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கும் பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இந்த உலகத்தில் சர்க்கரை நோயின் மையம் என்று எடுத்துக் கொண்டால் அது நம் இந்தியா தான்.
ஏனென்றால் 35 நபர்கள் தாண்டிய பெரும்பாலன மக்களுக்கு சக்கரை நோயின் தாக்கம் உள்ளது என உலக சுகாதார மையம் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்க்கரை நோய் ஏற்பட்டால் நாம் உடலில் தலைப்பகுதியில் இருந்து கால் பகுதி வரை அனைத்து உடல் உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை சர்க்கரை நோய்க்கு உண்டு. இதனால் நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தி நமக்கு வலிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வருவதற்கா வழி வகுக்கிறது. ஆம் ஆகையால் இன்று சர்க்கரை நோய் இருந்தால் நம் உடம்பில் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை பற்றி இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.
அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.
கிளைசெமிக்
நம் உடம்பில் உள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு சில காய்கறிகள் நமக்கு உதவி புரிந்து நாம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்த விதத்தில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைந்து காணப்படும் சில காய்கறிகளை நம் உணவாக உட்கொள்ளும் போது இவைகள் நம் உடம்பில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
சக்கரையை கட்டுபடுத்தும் காய்கறி
மேலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சில சத்துக்கள் தேவைப்படும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடலாம். அதாவது கேரட், வெள்ளரிக்காய், பாகற்காய், முட்டைக்கோஸ் மற்றும் கீரை போன்ற காய்கறிகள் நம் உடம்பில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை.
வெங்காயம்
பொதுவாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட்டும் மற்றும் கொழுப்பு இந்த இரு சத்துக்களும் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வெங்காயத்தில் கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் குறைந்த அளவில் இருந்து மேலும் வெங்காயத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை வெங்காயத்திற்கு உண்டு. வெங்காயத்தில் உள்ள குரோமியம் நம் உடம்பில் உள்ள குளுக்கோஸின் அளவையும் சமன் செய்கிறது. மேலும் வெங்காயத்தின் சாறு எடுத்து குடிப்பதன் மூலம் நம் உடம்பில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தி நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.