- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 16 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
சப்பாத்தி, பூரிக்கு எப்பொழுதும் குருமா மற்றும் பூரி மசாலா செஞ்சி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இனி இந்த மாறி வெங்காயம் மசாலா செஞ்சி சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : சுவையான பாலக்காடு பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி ?
வீட்டில் உள்ள எல்லோரும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. எத்தனை பூரி சாப்பிட்டோம் என்று கணக்கே இல்லாமல் சாப்பிடுவாங்க. இந்த மசாலா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சேர்த்து நன்கு பொரிந்து சிவக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் நன்கு கண்ணாடி பதத்திற்கு வெந்து வர வேண்டும்.
வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வேக விடவும்.
தக்காளி வதங்கும் சமையத்தில் மஞ்சள் தூள், கறிமசாலா தூள், சேர்த்து நன்கு வதங்க வேண்டும்.
நன்கு வதங்கியதும் 2½ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
வெந்ததும் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் எடுத்து 1 கப் அளவிற்கு தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி பச்சை வாசனை போக வதக்கவும்.
5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை நிறுத்தவும்.






