- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Side Dish
பொதுவா நம்ம வீட்ல காய்கறிகள் முட்டை இல்லாத போல் என்ன சைடிஷ் செய்வது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும் அந்த மாதிரி சமயத்துல உங்ககிட்ட வெங்காயம் தக்காளி இருந்தாலே போதும் அதை வச்சு காய்கறிகள் எதுவுமே இல்லாம சூப்பரான வெங்காய சப்ஜி செய்யலாம். இந்த வெங்காய சப்ஜி இட்லி, தோசை முக்கியமா சப்பாத்தி பூரிக்கு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கலவை சாதங்களான தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் இதுக்கும் கூட இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் நீங்க எதிர்பார்க்கிறத விட ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
உங்களுக்கு ரொம்ப ஃபேவரட் ஆன ஒரு சப்ஜியாவே இது மாறிடும். இந்த வெங்காய சப்ஜிக்கு பெருசா நம்ம எந்த பொருட்களும் சேர்க்க தேவையில்லை நம்ம வீட்ல இருக்கக்கூடிய சில பொருட்களே போதுமானது. சுட சுட சப்பாத்திக்கு இந்த சப்ஜியை சூடா வச்சு சாப்பிடும்போது ரொம்பவே சூப்பரா இருக்கும். இந்த மழைக்காலத்துக்கு இதை நைட் டின்னருக்கு செய்தீர்கள் என்றால் சப்பாத்தி எத்தனை சாப்பிடுறாங்க அப்படின்னு கணக்கே இல்லாம போயிட்டே இருக்கும். அதனால கொஞ்சம் அதிகமாவே சப்பாத்தி செஞ்சுக்கோங்க.
சப்ஜியும் கொஞ்சம் அதிகமாகவே செஞ்சுக்கோங்க. இதுக்கு மசாலா பொருட்களும் மிளகாய் தூள் தனியா தூள் இருந்தாலே போதுமானது. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு சப்பாத்தி செஞ்சு கூடவே இந்த சப்ஜியை சைடு டிஷ்ஷா கொடுத்து விடலாம் இது செய்றதுக்கு ரொம்பவே குறைவான நேரமே போதும். நிறைய நேரம் தேவைப்படும் யோசிக்க வேண்டாம். குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுத்துட்டு நீங்களும் இதையே லஞ்சுக்கும் வச்சுக்கலாம். குழந்தைகள் கண்டிப்பா டிபன் பாக்ஸை காலியா கிட்டு தான் வருவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான சிம்பிளான வெங்காய சப்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் 2 பெரிய வெங்காயத்தை சதுர வடிவில் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து அதனையும் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கி கெட்டியானதும் மஞ்சள் தூள் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கியதும் தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியாக வதக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான வெங்காய சப்ஜி தயார்.






