- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
ஒரு சிலர் குழம்பு காய் கூட்டு பொரியல் அப்பளம் அப்படின்னு வச்சு சாப்பிடுவதற்கு விரும்புவாங்க. இன்னும் ஒரு சிலர் பருப்பு பொடி எள்ளு பொடி இந்த மாதிரி சாதத்துல போட்டு சாப்பிட விரும்புவாங்க. இன்னும் ஒரு சிலர் இருக்காங்க அவங்களுக்கு துவையல் செஞ்சு கொடுத்தா போதும் அதை சாதத்தில் போட்டு அது கூட நல்லெண்ணெய் அப்படி இல்லன்னா நெய் ஊத்தி பிசைந்து சாப்பிட விரும்புவாங்க. அப்படி துவையல் பிரியர்களுக்காகவே இன்னைக்கு நம்ம இந்த வெங்காய துவையல் எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம். தேங்காய் துவையல் வேர்க்கடலை துவையல் கொள்ளு துவையல் அப்படின்னு நிறைய துவையல் ரெசிப்பீஸ் இருக்கு அந்த வகையில் இன்னைக்கு நம்ம இந்த வெங்காய துவையல் அட்டகாசமா செய்யப் போறோம்.
வீட்ல இருக்கக்கூடிய சிம்பிளான சில பொருட்களை வைத்து இந்த துவையல் செய்யலாம். இந்த துவையலை இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் பழைய சாதம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடிஷ் ஆக இருக்கும். இந்த சுவையான வெங்காயத் துவையல் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. சுட சுட சாதத்துல இந்த துவையல் வச்சு நெய் அப்படி இல்லன்னா நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுக்கு சைட் டிஷ்ஷா சுட்ட அப்பளம் இருந்தாலே போதும் இல்லனா ஆம்லெட் கூட போட்டு சாப்பிடலாம் செம டேஸ்டா இருக்கும்.
ஒரே ஒரு தடவை இதை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க வெங்காயத்தை துவையல் ஒரு சில பேரு சின்ன வெங்காயம் வச்சு செய்வாங்க. ஆனா இதுல நம்ம பெரிய வெங்காயம் வச்சு செய்ய போறோம் நல்லா கொரகொரப்பா அரைச்சு அதுல ஒரு தாளிப்பு கொடுத்துட்டா போதும் மணமாக சுவையாக சூப்பரான வெங்காய துவையல் ரெடி ஆகிடும். வீட்ல கலவை சாதம் செய்யும்போது இந்த துவையல் செஞ்சுட்டா வேறு எந்த சைடு டிஷ்மே தேவைப்படாது அவ்ளோ ருசியான இந்த வெங்காய துவையல் ரெசிபியை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொத்தமல்லி துவையல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 4 பல் பூண்டு புளி காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் 10 நிமிடம் வதக்கிய பிறகு கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கி கல் உப்பு சேர்க்கவும்.
அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கடலைப்பருப்பு தோல் உரிக்காத நான்கு பல் பூண்டு இரண்டு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்ததில் சேர்த்து விட்டால் சுவையான வெங்காயத் துவையல் தயார்.





