சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்க!

- Advertisement -

இந்த வெயில் காலத்துக்கு தினமும் கூட ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடணும் அப்படின்னு நமக்கு தோணும் நல்லா ஜில்லுனு அந்த ஐஸ் கிரீமை வாயில வைக்கும் போது கரஞ்சு போயிடும் ஐஸ்கிரீம்ல நிறைய பிளேவர்ஸ் இருக்கும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான ஐஸ்கிரீம் பிடிக்கும். வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் சாக்லேட் ஐஸ்கிரீம் இது மூன்றும் தான் எல்லாராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஐஸ்கிரீம் வகைகள். மார்க்கெட்லயும் இந்த ஐஸ்கிரீம் தான் கிடைக்கும். ஆனா வீட்ல நம்ம செஞ்சா நமக்கு என்ன பிளேவர் பிடிக்குமோ அந்த பிளேவர்ல சூப்பரா ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிடலாம்.

-விளம்பரம்-

அந்த வகையில இப்ப நம்ம ஆரஞ்சு ஐஸ் கிரீம் தான் செய்ய இந்த ஆரஞ்சு ஐஸ் கிரீம் நிறைய பேருக்கு ரொம்பவே பிடிக்கும். அதுலயும் குழந்தைகளுக்கு இந்த ஆரஞ்சு ஐஸ்கிரீம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கடைகள்ல இந்த ஆரஞ்சு ஐஸ்கிரீம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அதனால இப்போ சொல்ற மாதிரி செய்முறை இல்ல இந்த ஆரஞ்சு ஐஸ் கிரீம் செஞ்சா ஐஸ்கிரீம் சூப்பரா வரும் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த ஆரஞ்சு ஐஸ் கிரீம் செய்வதற்கு நம்ம கமலா ஆரஞ்சு தான் பயன்படுத்தணும் அதுதான் அல்ல இனிப்பா இருக்கும் புளிப்பா இருக்கிற ஆரஞ்சு யூஸ் பண்ணுனா ஐஸ்கிரீம் அவ்வளவு நல்லா இருக்காது.

- Advertisement -

அதனால உங்க வீட்ல கமலா ஆரஞ்சு இருந்தா இந்த ஐஸ்கிரீம் கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க உங்க வீட்ல இருக்கிற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க அதுக்கப்புறம் கடைகளில் போய் ஐஸ்கிரீமை வாங்க மாட்டாங்க அந்த அளவுக்கு இந்த ஐஸ்கிரீம் செம டேஸ்டா இருக்கும் இப்ப வாங்க இந்த டேஸ்டான குளிர்ச்சியான வாயில வச்ச உடனே கரையக்கூடிய ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

ஆரஞ்சு ஐஸ்கிரீம் | Orange Ice cream Recipe In Tamil

ஆரஞ்சு ஐஸ் கிரீம் தான் செய்ய இந்த ஆரஞ்சு ஐஸ் கிரீம் நிறைய பேருக்கு ரொம்பவே பிடிக்கும். அதுலயும் குழந்தைகளுக்கு இந்த ஆரஞ்சு ஐஸ்கிரீம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கடைகள்ல இந்த ஆரஞ்சு ஐஸ்கிரீம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் அதனால இப்போ சொல்ற மாதிரி செய்முறை இல்ல இந்த ஆரஞ்சு ஐஸ் கிரீம் செஞ்சா ஐஸ்கிரீம் சூப்பரா வரும் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த ஆரஞ்சு ஐஸ் கிரீம் செய்வதற்கு நம்ம கமலா ஆரஞ்சு தான் பயன்படுத்தணும் அதுதான் அல்ல இனிப்பா இருக்கும் புளிப்பா இருக்கிற ஆரஞ்சு யூஸ் பண்ணுனா ஐஸ்கிரீம் அவ்வளவு நல்லா இருக்காது.
Prep Time12 hours
Active Time10 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Orange ice cream
Yield: 2
Calories: 201kcal

Equipment

  • 1 ஐஸ்கிரீம் கோப்பை
  • 1 அடி கனமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 6 கமலா ஆரஞ்சு
  • 1 கப் கன்டன்ஸ்டு மில்க்
  • 2 கப் கிரீம்
  • 1 கப் சர்க்கரை

செய்முறை

  • 5 ஆரஞ்சு பழங்களில் உள்ள விதைகளை நீக்கி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். அந்த சாற்றுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ளவும்
  • பிறகு அதில் கிரீமை சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு இந்த கலவையை ஒரு டப்பாவில் சேர்த்து மூடி போட்டு மூடி பிரிட்ஜுக்குள் 6 மணி நேரம் வைக்கவும்.
     
  • ஆறு மணி நேரத்திற்கு பிறகு மறுபடியும் எடுத்து நன்றாக அதனை கலந்து விடவும்
  •  மறுபடியும் அதனை அதே டப்பாவில் சேர்த்து மூடி போட்டு மூடி ஆறு மணி  நேரம்பிரிட்ஜுகுள் வைத்து எடுத்து அதில் அதில் ஒரு ஆரஞ்சு பழத்தின் சுளைகளை விதை நீக்கி சேர்த்து கிளறி சாப்பிட்டால் சுவையான ஆரஞ்சு ஐஸ் கிரீம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 201kcal | Carbohydrates: 48g | Protein: 2.1g | Sodium: 12mg | Potassium: 178mg

இதையும் படியுங்கள் : வீட்டில் முலாம் பழம் இருந்தால் சூப்பரான முலாம் பழ ஐஸ்கிரீம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!