- Advertisement -
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் பால் பணியாரம். ஆனால் வீட்டில் விஷேச நாட்களில் மட்டும் தான் அதிகம் செய்வார்கள். இனி கவலை வேண்டாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
அதுவும் செட்டிநாட்டு ஸ்டைலில் எந்த ரெசிபி செய்தாலும் அட்டகாசமாக இருக்கும். அதே ஸ்டைலில் இன்று பால் பணியாரம் எப்படி செய்வதென்று இன்று பார்க்க போகிறோம்.
- Advertisement -
காலையில், மலையில் இந்த பால் பணியாரம் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
-விளம்பரம்-
பால் பணியாரம் | Paal Paniyaram Recipe In Tamil
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் பால் பணியாரம். ஆனால் வீட்டில் விஷேச நாட்களில் மட்டும் தான் அதிகம் செய்வார்கள். இனி கவலை வேண்டாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.அதுவும் செட்டிநாட்டு ஸ்டைலில் எந்த ரெசிபி செய்தாலும் அட்டகாசமாக இருக்கும். அதே ஸ்டைலில் இன்று பால் பணியாரம் எப்படி செய்வதென்று இன்று பார்க்க போகிறோம்.காலையில், மலையில் இந்த பால் பணியாரம் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- ½ கப் பொன்னி பச்சரிசி
- ½ கப் உளுத்தம் பருப்பு
- ¼ டீஸ்பூன் உப்பு
- 2½ கப் தேங்காய் துருவல்
- 3 ஏலக்காய்
- ¼ கப் சர்க்கரை
செய்முறை
செய்முறை:
- முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டையும் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பிறகு மிக்சி, அல்லது கிரைண்டரில் ஊறவைத்த அரிசி, உளுத்தப்பருப்பு சேர்த்து வழு வழுனு அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்கு பீட் பண்ணவும். மாவின் பதம் உளுந்துவடை க்கு அரைப்பது போல் இருக்க வேண்டும்.
- அடுத்து ஒரு மிக்சியில் தேங்காய் துருவல் சேர்த்து அத்துடன் ஏலக்காய் சேர்த்து வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக்கொள்ளவும். மூன்று பால் எடுக்கவேண்டும்.
- முதல் பாலிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி பால் எடுத்துக்கொள்ளவும். இரண்டாவது, மூன்றாவது பாலிற்கு வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கலந்து பிரிட்ஜில்30 நிமிடம் வைக்கவும்.
- பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் வெதுவெதுப்பாக காய்ந்ததும் அரைத்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுத்துகொள்ளவும்
- பிறகு அதனை தேங்காய் பாலில் 30 நிமிடம் போட்டு ஊறவைத்து பரிமாறவும்.
- இப்பொழுது சுவையான செட்டிநாடு பால் பணியாரம் தயார்.