Home சைவம் பச்சை மிளகாய் மண்டி காரசாரமா புளிப்பா இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

பச்சை மிளகாய் மண்டி காரசாரமா புளிப்பா இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

ஒரு சிலர் பச்சை மிளகாயை விரும்பி சாப்பிடுவாங்க. பழைய சாதத்துக்கு பச்சை மிளகாய் அப்படியே எண்ணெயில் போட்டு ஃப்ரை பண்ணி சாப்பிடுவாங்க. சின்ன வெங்காயத்தையும் சேர்த்து எண்ணெயில் போட்டு வதக்கி ஒரு சிலர் சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த சுவையான பச்சை மிளகாய் மண்டி பழைய சாதத்துக்கு ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். சில சமயங்கள்ல சுட சுட சாதத்துக்கும் கூட இந்த பச்சை மிளகாய் மண்டி ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். தயிர் சாதத்துக்கும் இது சூப்பரா இருக்கும். நல்ல காரசாரமா புளிப்பா இனிப்பா இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிடும்போது நாக்குக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

மூன்று சுவைகளும் சேர்ந்து இருக்கிற இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. பெரும்பாலும் குழந்தைகளுக்கு இதை கொடுப்பதை தவிர்த்துக்கோங்க. பெரியவங்க மட்டும் இதை சாப்பிட்டுக்கோங்க இதுல புளிப்பு இனிப்பு சேர்க்கிறதால பச்சை மிளகாய்யோட காரம் கொஞ்சம் கம்மியாகும். அதனால இதை தாராளமா பெரியவங்க சாப்பிடலாம். பழைய சாதம் சுடு சாதம் தயிர்சாதம் இது எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் இது. பெருசா உங்க வீட்ல சைடு டிஷ் எதுவும் செய்யலன்னா இந்த சைட் டிஷ் செஞ்சு சாப்பிடுங்க ரொம்ப அருமையா இருக்கும்.

இந்த சுவையான சூப்பரான ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டக்குனு ஏதாவது ரெசிபி செய்யணும் அப்படின்னா சுட சுட சுடு கஞ்சி வச்சு அது கூட இதை சைடு டிஷ்ஷா செஞ்சுருங்க ஈஸியா வேலை முடிஞ்சிடும். இந்த மாதிரி சைடு டிஷ் ரெசிப்பிஸ் பிடிக்காதவங்க கூட இப்படி ஒரு பச்சை மிளகாய் மண்டி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா நல்லா சாப்பிடுவாங்க. இது செய்றதுக்கு முன்னாடி பச்சை மிளகாய ஃபோர்க் வச்சு நல்லா குத்தி எடுத்துக்கணும் அப்பதான் புளிப்பு இனிப்பு எல்லாமே உள்ள இறங்கி சாப்பிடுவதற்கு ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

பச்சை மிளகாய் மண்டி | Pacha Milagai Mandi Recipe In Tamil

ஒரு சிலர் பச்சை மிளகாயை விரும்பி சாப்பிடுவாங்க. பழைய சாதத்துக்கு பச்சை மிளகாய் அப்படியே எண்ணெயில் போட்டு ஃப்ரை பண்ணி சாப்பிடுவாங்க. சின்ன வெங்காயத்தையும் சேர்த்து எண்ணெயில் போட்டு வதக்கி ஒரு சிலர் சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த சுவையான பச்சை மிளகாய் மண்டி பழைய சாதத்துக்கு ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். சில சமயங்கள்ல சுட சுட சாதத்துக்கும் கூட இந்த பச்சை மிளகாய் மண்டி ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். தயிர் சாதத்துக்கும் இது சூப்பரா இருக்கும். நல்ல காரசாரமா புளிப்பா இனிப்பா இந்த ரெசிபியை செஞ்சு சாப்பிடும்போது நாக்குக்கு அவ்வளவு ருசியா இருக்கும். மூன்று சுவைகளும் சேர்ந்து இருக்கிற இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. பழைய சாதம் சுடு சாதம் தயிர்சாதம் இது எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் இது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Pacha Milagai Mandi
Yield: 4 People
Calories: 107kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • புளி நெல்லிக்காய் அளவு
  • 10 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • பச்சை மிளகாயை ஃபோர்க் வைத்து குத்தி வைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு வெந்தயம் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • புளி கரைசலை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு பெருங்காயத்தூள் வெல்லம் சேர்த்து நன்றாக கெட்டியானதும் இறக்கினால் சுவையான பச்சை மிளகாய் மண்டி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 107kcal | Carbohydrates: 2.5g | Protein: 7g | Fat: 1.6g | Sodium: 175mg | Potassium: 296mg | Vitamin C: 143mg | Calcium: 39mg | Iron: 45mg

இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான பச்சை மிளகாய் சாம்பார் இனி இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் மொத்தமும் காலியாகும்!