Advertisement
சைவம்

சுவையான பச்சை பட்டாணி பராத்தா செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக சாப்பிடக் கூடிய வகையில் தாறுமாறான பச்சை பட்டாணி பராத்தா பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வழக்கமாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் டிபன் செய்யாமல் இது போன்று ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : மென்மையான மற்றும் மிருதுவான சப்பாத்தி எப்படி செய்வது ?

Advertisement

ஏன் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பாடு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பச்சை பட்டாணி பராத்தா அட்டகாசமான சுவையில் இருக்கும் அடுத்த முறையும் இது போல் செய்ய சொல்லி உங்களிடம் சொல்லுவார்கள். அதனால் இன்று இந்த பச்சை பட்டாணி பராத்தா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பச்சை பட்டாணி பராத்தா | Pachai Pattani Paratha Recipe Recipe in Tamil

Advertisement
408 7.2992,10.2678 C7.2992,10.8948 6.7902,11.4028 6.1632,11.4028 L6.1632,11.4028 L5.0992,11.4028 C4.4722,11.4028 3.9632,10.8948 3.9632,10.2678 C3.9632,9.6408 4.4722,9.1318 5.0992,9.1318 L5.0992,9.1318 Z M16.6304,2.2715 L7.3704,2.2715 L7.3704,4.6845 L16.6304,4.6845 L16.6304,2.2715 Z"> Print Recipe
நீங்கள் வழக்கமாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் டிபன் செய்யாமல் இது போன்று ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பாடு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பச்சை பட்டாணி பராத்தா அட்டகாசமான சுவையில் இருக்கும் அடுத்த முறையும் இது போல் செய்ய சொல்லி உங்களிடம் சொல்லுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Paratha, பராத்தா
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 2 People
Calories 261

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 1  கப் கோதுமை மாவு
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 1 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 1 tbsp தயிர்
  • 1 tsp எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கப் அளவு பச்சைப் பட்டாணி எடுத்து கொண்டு தண்ணீரில் நன்கு ஊற வைத்து பின் ஊற வைத்த பச்சை பட்டாணியை நன்கு வேக வைத்து கொள்ளுங்கள்.
  • அதன் பின் வேக வைத்த பச்சை பட்டாணியை ஒரு
    Advertisement
    மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பெரிய பவுளில் ஒரு கப் அளவு கோதுமை மாவு எடுத்து கொள்ளவும்.
  • பின் கோதுமை மாவுடன் நாம் மிக்ஸியில் அரைத்த பட்டாணி விழுது சேர்த்து கலந்து கொள்ளவும். பின் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், பெடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பின் மாவை 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து பின் ஆறு பெரிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். பின் உருண்டையை பூரி கட்டையில் வைத்து மென்மையாக தேய்த்து கொள்ளுங்கள்.
  • அதன் பின் வழக்கம் போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கல் சூடானதும் நாம் தேய்த்த பச்சை பட்டாணி பராத்தாவை கல்லில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான பச்சை பட்டாணி பராத்தா தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 300gram | Calories: 261kcal | Carbohydrates: 47g | Protein: 21g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 10mg | Sodium: 2mg | Potassium: 352mg | Fiber: 8g | Sugar: 0.5g | Vitamin A: 11IU | Iron: 2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

4 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

9 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

13 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

13 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

18 மணி நேரங்கள் ago