- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 2
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக சாப்பிடக் கூடிய வகையில் தாறுமாறான பச்சை பட்டாணி பராத்தா பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வழக்கமாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எப்பொழுதும் ஒரே மாதிரியான வகையில் டிபன் செய்யாமல் இது போன்று ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பச்சை பட்டாணி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : மென்மையான மற்றும் மிருதுவான சப்பாத்தி எப்படி செய்வது ?
ஏன் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பாடு சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பச்சை பட்டாணி பராத்தா அட்டகாசமான சுவையில் இருக்கும் அடுத்த முறையும் இது போல் செய்ய சொல்லி உங்களிடம் சொல்லுவார்கள். அதனால் இன்று இந்த பச்சை பட்டாணி பராத்தா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு கப் அளவு பச்சைப் பட்டாணி எடுத்து கொண்டு தண்ணீரில் நன்கு ஊற வைத்து பின் ஊற வைத்த பச்சை பட்டாணியை நன்கு வேக வைத்து கொள்ளுங்கள்.
அதன் பின் வேக வைத்த பச்சை பட்டாணியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பெரிய பவுளில் ஒரு கப் அளவு கோதுமை மாவு எடுத்து கொள்ளவும்.
பின் கோதுமை மாவுடன் நாம் மிக்ஸியில் அரைத்த பட்டாணி விழுது சேர்த்து கலந்து கொள்ளவும். பின் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், பெடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின் மாவை 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து பின் ஆறு பெரிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். பின் உருண்டையை பூரி கட்டையில் வைத்து மென்மையாக தேய்த்து கொள்ளுங்கள்.
அதன் பின் வழக்கம் போல் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கல் சூடானதும் நாம் தேய்த்த பச்சை பட்டாணி பராத்தாவை கல்லில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான பச்சை பட்டாணி பராத்தா தயாராகிவிட்டது.






