Home சைவம் வித்தியாசமா ஒரு தடவை இந்த பக்கோடா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

வித்தியாசமா ஒரு தடவை இந்த பக்கோடா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

பக்கோடா குழம்பு கேக்குறதுக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கா ஆனா இந்த பக்கோடா குழம்பு செஞ்சா சாப்பாடு சப்பாத்தி தோசை பூரி இட்லி, தோசை எப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். மொரு மொருன்னு பக்கோடாவை குழம்புல போட்டு ஊற வைத்து குழம்போடு சேர்த்து சாப்பிடும்போது நீங்க இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு சுவைல இருக்கும். உங்க வீட்ல இருக்கிறவங்க யாராவது கொஞ்சம் வித்தியாசமாக குழம்பு வை அப்படின்னு சொல்லி உங்ககிட்ட கேட்டாங்கன்னா இந்த பக்கோடா குழம்பு செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

எல்லாரும் வெங்காய பக்கோடா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் அந்த வெங்காய பக்கோடா குழம்புல போட்டு செய்யும் போது ஒரு தனி சுவை இருக்கும். இந்த வெங்காய பக்கோடா குழம்பு இன்னைக்கு கூட நீங்க செஞ்சு ரசித்து சாப்பிடலாம். வீட்ல காய்கறிகள் எதுவும் இல்லையா வெங்காயம் தக்காளி மட்டும் தான் இருக்கு நான் இந்த குழம்ப நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம் பக்கோடா இந்த குழந்தை சாதம் சப்பாத்தி இட்லி தோசை அப்டின்னு எது கூட வேணும்னாலும் வச்சு ருசிக்கலாம். இப்ப வாங்க இந்த ருசியான பக்கோடா குழம்பு எப்படி ஈஸியா செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

பக்கோடா குழம்பு | Pakora Curry Recipe In Tamil

பக்கோடா குழம்பு கேக்குறதுக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கா ஆனா இந்த பக்கோடா குழம்பு செஞ்சா சாப்பாடு சப்பாத்தி தோசை பூரி இட்லி, தோசை எப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். மொரு மொருன்னு பக்கோடாவை குழம்புல போட்டு ஊற வைத்து குழம்போடு சேர்த்து சாப்பிடும்போது நீங்க இதுவரைக்கும் சாப்பிடாத ஒரு சுவைல இருக்கும். உங்க வீட்ல இருக்கிறவங்க யாராவது கொஞ்சம் வித்தியாசமாக குழம்பு வை அப்படின்னு சொல்லி உங்ககிட்ட கேட்டாங்கன்னா இந்த பக்கோடா குழம்பு செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. எல்லாரும் வெங்காய பக்கோடா செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் அந்த வெங்காய பக்கோடா குழம்புல போட்டு செய்யும் போது ஒரு தனி சுவை இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Pakora Curry
Yield: 4 People
Calories: 156kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் தேங்காய்
  • 6 பச்சை மிளகாய்
  • 3 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கசகசா
  • 5 முந்திரி
  • 1 பிரியாணி இலை
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 3 தக்காளி
  • 5 பெரிய வெங்காயம்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 கப் கடலை மாவு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • உப்பு                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஏலக்காய் பட்டை கிராம்பு பிரியாணி இலை, ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு 2 பெரிய வெங்காயம் நறுக்கி சேர்த்து தக்காளி இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் முந்திரி பருப்பு, கசகசா, ஒரு டீஸ்பூன் சோம்பு, 3 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதனையும் வதங்கிய வெங்காயம் தக்காளி உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.‌
  • பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு நன்றாக கொதித்து வெந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கி விடவும்.
  • இப்பொழுது பாத்திரத்தில் வெங்காயம் கடலை மாவு தட்டிய இஞ்சி ஒரு டீஸ்பூன் சோம்பு, அரிசி மாவு மிளகாய்த்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக பிசைந்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் பக்கோடா தயார்.
  • இந்த பக்கோடாக்களை தயார் செய்து வைத்துள்ள குழம்பில் சேர்த்து பரிமாறினால் சுவையான பக்கோடா குழம்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 156kcal | Carbohydrates: 5.3g | Protein: 21g | Fat: 3.9g | Sodium: 70mg | Potassium: 136mg | Fiber: 10.4g | Vitamin A: 21IU | Vitamin C: 96mg | Calcium: 16.8mg | Iron: 24mg

இதனையும் படியுங்கள் : ருசியான காளான் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!