பலாப்பழம் தான் நம்ம அதிகமா விரும்பி சாப்பிடுவோம். இந்த பலாப்பழம் வச்சு அல்வா கேசரி கூட செய்வாங்க அதெல்லாம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். ஆனா பலாபழம் மட்டும் இல்லாம பலாக்காய் கூட வச்சு நம்ம பிரியாணி புரியல அப்படின்னா செஞ்சு அசத்தலாம். பொதுவா வெஜிடேரியனாக இருக்கிறவங்க இந்த பலாக்காய் வச்சு சைவ மட்டன் பிரியாணி செஞ்சு சாப்பிடுவாங்க டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.
அந்த வகையில இப்ப நம்ம ரொம்பவே சிம்பிளா ஈஸியா டேஸ்ட்டான பலாக்காய் பொரியல் தான் பார்க்க போறோம். வெறும் குறைவான பொருட்களை வைத்து சூப்பரான ஒரு பலாக்காய் பொரியல் செய்ய முடியும். காரக்குழம்பு மாதிரியான காரசாரமான குழம்பு வகைகளுக்கும் சாதத்துக்கும் இந்த பொரியல் சூப்பரான காம்பினேஷனா இருக்கும்.
ஒரு தடவ உங்க வீட்ல இந்த பலாக்காய் கிடைச்சா கண்டிப்பா பொரியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்வீங்க. சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இதை வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு சூப்பராவே இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான ஈஸியான சிம்பிளான பலாக்காய் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
பலாக்காய் பொரியல் | Palaakkai Poriyal Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 சிறிய பலாக்காய்
- 1 பெரிய வெங்காயம்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு
- 2 காய்ந்த மிளகாய்
- 1 கொத்து கருவேப்பிலை
- 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- உப்பு தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் பலாக்காயை கத்தியில் என்னை தடவிக் கொண்டு நறுக்கி அதில் உள்ள தண்டு பாகங்களை எடுத்து விட்டு மற்றவைகளை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
- அதனை ஒரு குக்கரில் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு எடுக்கவும் வெந்ததும் ஆறிய பிறகு கைகளில் மசித்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்
- பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்
- இப்பொழுது மசித்து வைத்துள்ள பலாக்காயை அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்
- அரைத்து வைத்துள்ளதை பலாக்காய் உடன் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் சுவையான பலாக்காய் பொரியல் தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : நல்லா கார சாரமான இந்த கார சோறு ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!