- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விடவும் முடியும். அப்படியான ஒரு பலாக்கொட்டை சாம்பார் ரெசிபி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். சுவைத்தவுடன் நாம் தூக்கி எறியும் பழங்களின் கொட்டை மற்றும் தோல் ஆகியவற்றில் ஏராளமான அத்யாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கம். பலாக்கொட்டைகளில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.
பழங்களை விட ஒரு மரத்தை உருவாக்கும் கொட்டையில் மரபணு கூறுகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன் செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். தினமும் மதிய உணவுக்கு என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் கேரட், முருங்கை, என்று சிகேத காய்கறிகளை வைத்து சாம்பார் செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். பலாப்பழத்தின் விதையைக் கொண்டு பல வகையான உணவுகளை செய்யலாம். அதிலும் இந்த சபலாக்கொட்டை சாம்பார் செய்து சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இதற்கு உருளைக்கிழங்கு பொரியல் அல்லது பட்டாணி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ருசியான பலாக்கொட்டை தேங்காய் பொரியல் இனி இப்படி செய்து பாருங்கள்!
Ingredients
Method
முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் பலாக்கொட்டை, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பலாக்கொட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் சாம்பார் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக வைக்கவும்.
இது கொதித்ததும் புளி கரைசல், வேக வைத்து வைத்துள்ள பருப்பு மற்றும் பலாக்கொட்டை சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.
ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான பலாக்கொட்டை சாம்பார் தயார். இந்த சாம்பார் இட்லி, தோசை, சாதம் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






