- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish

உங்கள் வீட்டில் சப்பாத்தியை அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷையும் அதிகம் செய்வீர்களா? எப்போது ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து அலுத்து விட்டதா? அப்படியானால் அடுத்த முறை சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்வதாக இருந்தால், ஆரோக்கியமான இந்த பாலக் தால் செய்து பாருங்கள். இதுவரை பாலக்கீரை வைத்து நிறைய ரெசிபி செய்திருப்பீர்கள். பாலக்கீரை கடையல், பாலக் பன்னீர், பாலக் சப்பாத்தி அப்படின்னு செய்திருப்பீர்கள். அதனால் இந்த பாலக் கீரையை வைத்து சூப்பரான இந்த சிம்பிளான ரெசிபியை ஒரு தடவை செய்து பாருங்கள்.
கண்டிப்பா உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு தடவை இந்த ரெசிபியை செய்து பார்த்து விட்டால் அதுக்கப்புறம் அடிக்கடி நீங்கள் இந்த ரெசிபியை செய்வீர்கள் அந்த அளவுக்கு சூப்பராக இருக்கும். பொதுவாக பாலக்கீரை சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது ஆனால் அதை அப்படியே கடையல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது. அவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இப்போது சுவையான பாலக் தால் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் துவரம் பருப்பை நன்கு அலசி விட்டு குக்கரில் சேர்த்து குழைய வேகவைத்து எடுக்கவும்.
பின் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய், சீரகம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு கீரையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி வேகவைத்த பருப்பை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
இவை நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி, கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பாலக் தால் தயார்.






