Advertisement
ஸ்நாக்ஸ்

மொறு மொறுனு ஸ்நாக்ஸ் சாப்பிட பாலக் கீரை பக்கோடா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ருசியாகவும் இருக்கும் ஆரோக்கியமும் கூட!

Advertisement

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பாலக் கீரை பக்கோடா.

தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பக்கோரா ன்றும் அழைக்கப்படுகிறது. இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும் பிரபலம் அடைந்திருக்கிறது. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது.

Advertisement

விருந்தினர்களின் வருகையின்போதும், குழந்தைகளின் சிணுங்கலின்போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம்பெறுவதும் பக்கோடாதான். ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும் பாலக் கீரை பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பாலக் கீரை பக்கோடா | Palak Pakoda Recipe In Tamil

Print Recipe
தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திராமற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பக்கோரா ன்றும் அழைக்கப்படுகிறது.இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை
Advertisement
மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும்பிரபலம் அடைந்திருக்கிறது. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்குமிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. ஒரு சில பொருள்களைவைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும்மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும்பாலக் கீரை பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course
Advertisement
snacks
Cuisine tamil nadu
Keyword palak Pakoda
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 25

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் பாலக் கீரை
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1/2 கப் பஜ்ஜி மாவு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொறிப்பதற்கு

Instructions

  • பாலக் கீரையை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பௌலில் அரிசி மாவு, மிளகாய் தூள், பஜ்ஜி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • அதில் நறுக்கிய பலக்கீரை, வெங்காயம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
     
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்த மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொறித்தெடுக்கவும்.பொன்னிறமாக பொறித்து எடுத்து பரிமாறும் தட்டில் வைக்கவும்.
  • அவ்வளவுதான்மிகவும் சுவையான சத்தான பாலக் கீரை பக்கோடா சுவைக்கத் தயார்.
  • மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 25kcal | Carbohydrates: 5.3g | Protein: 2g | Fat: 0.1g | Potassium: 303mg | Fiber: 5.5g | Vitamin C: 46.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

3 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

14 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

20 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

23 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

23 மணி நேரங்கள் ago