- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாங்கிய பலாப்பழத்தின் கொட்டை உள்ளதா? அப்படியானால் அந்த கொட்டையைக் கொண்டு ஈஸியான முறையில் கிரேவி செய்து கொடுங்கள். இந்த கோடை காலத்தில் பலாப்பழம் அதிகமாக கிடைக்கும். அதனை வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி போடாமல் வெயிலில் காய வைத்து பின் அதனை சமையல் செய்யலாம்.
சுவைத்தவுடன் நாம் தூக்கி எறியும் பழங்களின் கொட்டை மற்றும் தோல் ஆகியவற்றில் ஏராளமான அத்யாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கம். பலாக்கொட்டைகளில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதற்கு இந்த பலாக்கொட்டை கிரேவி ரெசிபி உதவும்.
தினமும் இரவு உணவுக்கு என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசித்து செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் மீல் மேக்கர் கிரேவி, பன்னீர் கிரேவி, தக்காளி கொத்ஸ்சு என்று செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். இது சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிம்பிளான பலாக்கொட்டை கிரேவி குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இப்போது சுவையான இந்த பலாக்கொட்டை கிரேவி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட பலாக்கொட்டை பொடிமாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
Ingredients
Method
முதலில் பலாக்கொட்டை இரண்டாக நறுக்கி குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சிக்கன் மசாலா, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
பின் வேகவைத்த பலாக்கொட்டையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
இது நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பலாக்கொட்டை கிரேவி தயார்.






