நம் நாட்டில் பல சாஸ்திர, சம்பிரதாயங்கள் உள்ளன. நமது மக்கள் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக மற்ற உயிரினங்களை தெய்வமாக பார்க்கும் பழக்கம் இன்று வரை இருந்து வருகிறது. காக்கை நம் வீட்டின் முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள். காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம், போன்ற பல சாஸ்திர விதிகள் கூறுகின்றன.
நாயை காலபைரவன் ஆக நினைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்தும் பலன்கள் சொல்லப்படுகின்றன. பல்லிகள் நம்முடைய வீட்டில் நம்முடனேயே வசிக்கும் ஒரு உயிரினம். நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும், சில இடங்களில் கத்தினால் தீயவை நடக்கும் என்று கூறுவார்கள்.
பண்டைய காலங்களில் பல்லியைப் பற்றி கௌளி சாஸ்திரம் என்று படித்திருக்கிறார்கள். மனிதர்களுக்கு நல்ல சகுனங்களையும் கெட்ட சகுனங்களையும் பல்லிகள் மூலம் உணர்த்துவதற்கு கடவுள் அனுப்பிய ஒரு உயிரினம்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. மனிதர்கள் மீது பல்லி விழுந்தால் அது விழும் இடத்திற்கு ஏற்ப பலன் சொல்லுவார்கள். நம்முடைய உடம்பில் தலை முதல் கால் வரை பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இடது கை அல்லது இடது கால்
இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஐதீகம். பெண்களுக்கு இடது கை மீது பல்லி விழுந்தால் மன உளைச்சல் தரக்கூடிய விஷயங்கள் நடக்கும்.
வலது கை மற்றும் கால்
வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் ஏற்படும் என்ற அர்த்தமாகும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு பணத் தடைகள் உருவாக வாய்ப்புள்ளது என்று பொருள்.
பாதம்
பாத பகுதியில் பல்லி விழுந்தால் நீங்கள் வெளியே பயணம் செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது குறிப்பாக வெளிநாடு அல்லது வேலை தேடி வெளிப்பகுதிகளுக்கு சென்று முன்னேற்றம் அடையக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. பெண்களுக்கு பாதத்தில் பல்லி விழுந்தால், அது ஆண் குழந்தை பிறக்கப் போவதைக் குறிக்கிறது.
தொப்புள்
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வைரம், விடூரியம், ரத்தினம் போன்ற பொருட்கள் உங்களைத் தேடி வரும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக நகைகள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது.
தொடை
தொடை பகுதியில் பல்லி விழுந்தால் மன சஞ்சலம் ஏற்படும் அல்லது உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை அமையும் என கூறப்படுகிறது. குறிப்பாக பெற்றோர்களுக்கு வருத்தம் ஏற்படக்கூடிய தருணங்கள் அமையும் என கூறப்படுகிறது. அல்லது பல்லி விழுந்தவரின் அம்மா அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும்.
மார்பு
மார்பின் இடது பக்கம் பல்லி விழுந்தால் அது சுகம் கிட்டும் என்பதை குறிக்கின்றது. வலது மார்பு பக்கம் பல்லி விழுந்தால் திடீர் லாபம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வாகன பயங்களில் நிதானமாகவும், கவனமாகவும் வாகனத்தை ஓட்ட வேண்டும்.
கழுத்து
கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் சுற்றி இருப்பவர்களோடு பகைமை உண்டாகும். அல்லது பல்லி விழுந்தவரின் மூத்த சகோதரர் அல்லது சகோதரிக்கு ஏதேனும் பிரச்சனை உண்டாகும்.
நெற்றி
நெற்றி மீது பல்லி விழுவது நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. நெற்றியின் இடது பக்கம் பல்லி விழுந்தால் கீர்த்தி அதே, வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று சொல்வார்கள்.
காது
பல்லி ஒருவரின் வலது காதில் விழுந்தால், நீண்ட ஆயுளை அதிகரிக்கும். அதுவே இடது காதில் விழுந்தால், அது அந்த நபரின் ஆதாயத்தை மேம்படுத்தும்.
உதடு
ஒருவரின் உதட்டின் மேல் பல்லி விழுந்தால், அது செல்வம் அழிந்து போவதைக் குறிக்கிறது. அதுவே உதட்டின் கீழ் பல்லி விழுந்தால், அது பணக்கார வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
புருவம்
புருவத்தில் பல்லி விழுந்தால், ராஜ பதவி என்னும் உயர்பதவியில் உள்ளவர்களிடமிருந்து உதவி கிடைக்கும்.
தலை
பொதுவாகவே, தலையில் பல்லி விழுந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. பல்லி ஒருவரது தலையில் விழுந்தால், அந்நபர் செல்வம், ஆடம்பரமான வாழ்க்கையை வாழப் போவதைக் குறிக்கும். அதுவே ஒரு பணக்காரரின் தலையில் பல்லி விழுந்தால், அந்நபர் செல்வத்தை இழக்க நேரிடும். தலையின் முன்பகுதியில் பல்லி விழுந்தால் நிதி ரீதியான ஆதாயங்கள், லாபம் கிடைக்கும். தலையின் பின் பகுதியில் பல்லி விழுந்தால், தடைகள் ஏற்படும், எதையாவது செய்ய திட்டமிட்டிருந்தால் அது தாமதமாகும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பல்லி இருந்தால் பண கஷ்டம் வருமா? அல்லது தரித்திரம் பிடிக்குமா? என்பது உங்களுக்கு தெரியுமா ?