பர்சில் பணம் நிரம்பி வழிய இந்த பொருட்களை வைத்து பாருங்கள்

- Advertisement -

இன்றைய காலத்தில் பணம் மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் முதல் ஆண்கள் வரை வேலைக்கு சென்றாலும் அவர்கள் பர்சில் பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குடும்பத்தில் பல்வேறு செலவுகள் ஏற்படும். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் பர்ஸில் அதிகமாக பணம் வைக்க விரும்புவார்கள். அதற்காக கடினமாக உழைக்கிறார்கள். இது உங்கள் வாழ்க்கைக்கு ஆடம்பரத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் வருமானத்தை அதிகமாக பெறவும், உங்கள் செல்வத்தை அதிகரிக்கவும் வழிகள் உள்ளன.

-விளம்பரம்-

ஆனால் பணத்தை ஈர்க்கம் சூட்சுமங்கள் பலருக்கும் தெரிவதில்லை என்பது தான் உண்மை. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தினாலே பணம் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கும். அப்படி நாம் தினமும் பயன்படுத்தும் நம்முடைய பர்சில் சில குறிப்பிட்ட பொருட்களை எப்போதும் வைத்திருந்தாலே பணம் வந்து, பர்சை நிரப்பிக் கொண்டே இருக்கும் என வழிகாட்டுகிறது வாஸ்து சாஸ்திரம். பர்ஸில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கு என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

வெள்ளி

உங்களின் பர்ஸில் வெள்ளி நாணயம் வைத்திருப்பின், சுக்கிரனின் அருள் நிறைந்திருக்கும். ஆனால் அதை நம் பணப்பையில் வைப்பதற்கு முன், அதை லட்சுமி தேவியிடம் வைத்து வழிபடவும். அதன்பிறகு, அதை உங்கள் பணப்பையில் வைக்கவும்.

அரிசி

அரிசி என்பது உணவுப் பொருள் என்பதைத் தாண்டி நாம் அதை அன்னலட்சுமியாகவே பார்ப்பது வழக்கம். ஜோதிட சாஸ்திரப்படி அரிசியை உங்கள் பர்ஸில் வைத்திருப்பதால் மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஒரு சில அரிசிகளை உங்கள் பணப்பையில் எப்போதும் போட்டு வைத்திருப்பது நேர்மறை ஆற்றலை ஈர்க்க ஒரு வழியாக இருக்கும். புதிய ஆற்றலை ஈர்க்க நீங்கள் அரிசி தானியங்களை அடிக்கடி மாற்றி கொள்ளலாம்.

அரச மர இலை

அரச மரம் இந்து மதத்தில் வணங்கப்படக்கூடிய ஒரு மரம். ஒரு அரச மர இலையை எடுத்து உங்களின் பணப்பையில் வைப்பதால் உங்களின் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். அரச மரத்தின் பிரெஷ்ஷான இலைகளை ஒரு சிறப்பு மந்திரத்துடன் ஜெபித்து கங்கை நீரால் சுத்தப்படுத்தி, சரியான நேரத்தில் உங்கள் பணப்பையில் வைத்தால் வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை நீங்கும்.

-விளம்பரம்-

தாமரை விதைகள்

மஹாலக்ஷ்மி தேவிக்கு மிகவும் பிடித்த மலர் தாமரை. எனவே தாமரை விதைகளை பணப்பையில் வைத்திருப்பது நீண்ட கால நிதி ஆதாயத்தை ஏற்படுத்தி தருகிறது.

ருத்ராட்சம்

ஆன்மிகத்தில் செல்வத்திற்கான தெய்வமாக மகாலட்சுமி தேவியை குறிப்பிடுகிறோம். ஜோதிட விதிகளின் படி ருத்ராட்சத்தை பர்ஸில் வைக்கும் பொழுது லட்சுமி தேவியின் நல்லருள் கிடைத்து மகிழ்ச்சியும், நிதி நிலையில் மேன்மையும் அடையலாம்.

மகாலட்சுமியின் புகைப்படம்

செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவியின் படத்தை பணப்பையில் வைத்திருப்பதால் உங்களின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பொருளாதார பற்றாக்குறை நீங்கும். அதிலும் தாமரை மீது லக்ஷ்மி தேவி அமர்ந்திருப்பது போன்ற படத்தை, பர்ஸ் அல்லது வாலட்களில் வைத்தால் இன்னும் சிறப்பான பலனை பெறலாம்.

-விளம்பரம்-

யந்திரம்‌

புனிதமான ஸ்ரீ லட்சுமி யந்திரத்தை பாக்கெட்டில் அல்லது பர்ஸில் வைத்திருந்தால் அது செல்வத்தைத் தவிர, நேர்மறை ஆற்றலையும் அதிகரித்து தரும். இது உங்கள் வாழ்க்கையை நேர்மறையானதாக மாற்றும் மற்றும் நிதி வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏலக்காய்

பொதுவாகவே ஏலக்காய் மகாலட்சுமியின் அம்சகமாக பார்க்கப்படுகிறது. இதற்கு நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளை அழித்து நேர்மறை சக்திகளை ஈர்க்கின்ற மகிமை வாய்ந்த சக்தி இருக்கிறது. இதனை உங்களுடைய பர்ஸில் வைத்திருந்தால் பண‌ வரவு சரளமாக இருக்கும். நம் மணி பர்ஸில் ஒரு ஏலக்காய் வைத்தால் பணம் விரயம் ஆகாமல் பன்மடங்கு பெருங்குமாம்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை சுற்றி நம் பர்ஸில் வைத்து வர பண வரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும். புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம்.

ஆசீர்வாத பணம்

உங்கள் தாத்தா, பாட்டி, பெற்றோர் அல்லது வயதில் பெரியவர்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற்ற பிறகு அவர்களிடமிருந்து பெறப்படும் பணத்தை உடனடியாக செலவழித்து விடாமல், பாதுகாப்பாக உங்களது பணப்பையில் வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை ஈர்க்கும்.

பச்சை கற்பூரம்

பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். அந்த பச்சை கற்பூரத்தின் வாசனை எவ்வளவுக்கு எவ்வளவு பெருகுகிறதோ அவ்வளவு நன்மை நமக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

இதனையும் படியுங்கள் : பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை