தித்திக்கும் சுவையில் பன்னீர் பால் கொழுக்கட்டை இப்படி வீட்டிலயே செய்து பாருங்கள்! அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!

பால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை. நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது. மேலும் கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள். இவை பாரம்பரி

By Prem Kumar · 4/3/2024

பால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை. நாம் பாரம்பரிய உணவில் எப்பொழுதும் கொழுக்கட்டை இடம்பெற்று வருகிறது. மேலும் கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் உடலில் அதிகப்படியான சத்துக்கள் சேர்க்கும் என்றும் சொல்வார்கள். இவை பாரம்பரிய செட்டி நாட்டு உணவு வகைகளில் தோன்றியவை.

செட்டி நாடு மரபுப்படி திருமணம் முடிந்து உறவினர்கள் திருமண வீட்டில் ஒன்றாக கூடியிருக்கும் போது உறவினர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகார வகைகள் செய்து தருவது வழக்கம். அந்த வகையில் செய்து தரப்படும் பலகார வகைகளில் பால் பணியாரம் மற்றும் பால் கொழுக்கட்டை கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.

கொழுக்கட்டை வகைகளை சார்ந்த இவை தேங்காய் பால் அல்லது பசும் பால், மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படுகிறது. இதில் சேர்க்கும்  பால் வயிற்று புண்ணை, மற்றும் வாய் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. கொழுக்கட்டை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த சுவையுள்ள பன்னீர் பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full