- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
இந்த பன்னீர் பொடிமாஸ் குழந்தைகளுக்கு சாப்பிட மிகவும் பிடித்த ஒன்று, அதே நேரம் பெரியவர்களும் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் அருமையான சுவையில் செய்து விடலாம், இதனுடன் சப்பாத்தி சேர்த்துச்சாப்பிட்டால் அற்புதமான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இந்த பன்னீர் பொடி மாஸை
இதையும் படியுங்கள் : காரசாரமான பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி ?
விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான பன்னீர் பொடிமாஸ் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள். இதை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.
Ingredients
Method
முதலில் பனீர் உதிர்த்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் நசுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்துள்ள பனீர் சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், சேர்த்து கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.
இப்பொழுது சுவையான பனீர் பொடிமாஸ் தயார்.






