- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, Kashmiri
- Course
- Side Dish
பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பன்னீரானது சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் பன்னீர் செய்வீர்களா? பொதுவாக பன்னீர் வாங்கினால், சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்வதாக இருந்தால், அதைக் கொண்டு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கடாய் பன்னீர் என்று செய்வோம். ஆனால் இப்படி எத்தனை நாள் தான் ஒரே மாதிரி பன்னீரை சமைப்பீர்கள். அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் செய்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.
அப்படி என்ன வித்தியாசமான பன்னீர் ரெசிபி செய்வது என்று யோசனையாக உள்ளதா? அப்படியானால் பன்னீர் யக்னி செய்து பாருங்கள். பன்னீர் யக்னி என்பது ஒரு காஷ்மீரி ரெசிபி. இது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும். பொதுவாக சைவ உணவில் பன்னீர் இன்றியமையாத பகுதியாகும். உடலின் சரியான செயல்பாட்டுக்கு தேவையான ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. எனவே மூட்டுவலியால் பாதிக்கப்படுபவர்கள் பன்னீரை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த பன்னீரில் பன்னீர் யக்னி செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி. இப்போது சுவையான பன்னீர் யக்னி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தயிர், பன்னீர் துண்டுகள், ஊற வைத்த முந்திரி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் பன்னீர் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதன்பிறகு அதே கடாயில் சதுரமாக நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, சீரகம், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதனுடன் அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் வதக்கிய பன்னீர், வெங்காயம், குடைமிளகாய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு, மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு கஸ்தூரி மேத்தி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் யக்னி தயார்.






