Advertisement
சைவம்

புதிதான சுவையில் சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு செய்யலாம் வாங்க

Advertisement

நம்ம எல்லாருமே பப்பாளி பழம் சாப்பிட்டு இருப்போம் அது நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. முக்கியமா பெண்களுக்கு பப்பாளி பழம் ரொம்பவே நல்லது. கர்ப்பிணி பெண்கள் தவிர மற்ற எல்லா பெண்களுமே பப்பாளி பழம் சாப்பிடலாம். முகத்துக்கு பளபளப்பு கொடுக்கக் கூடியது தான் இந்த பப்பாளி பழம். அதோட சாப்பிடுவதற்கும் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.

ஒரு சிலர் பப்பாளி பழம் மட்டும்தான் சாப்பிட்டுருப்பாங்க ஆனா ஒரு சிலர் பப்பாளி காய் வச்சு வெரைட்டியான ஏதாவது ஒரு உணவு சாப்பிட்டு இருப்பாங்க ஆனா ஒரு சிலர் பப்பாளிக்காய் வச்சு சுத்தமா எதுவுமே சமைச்சிருக்க மாட்டாங்க அது எப்படி இருக்கணும்னு கூட சில பேருக்கு தெரியாது. அவங்களுக்காகவே இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல பப்பாளிக்காய் கூட்டு செய்ய போறோம். ஒருவேளை உங்களுக்கு பப்பாளி காய் கிடைச்சுது அப்படின்னா அது பழுக்குற வரைக்கும் வெயிட் பண்ண முடியலன்னா டக்குனு பப்பாளிக்காய் வச்சு இந்த கூட்டு செஞ்சிடுங்க சாதத்துக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவதற்கு செம டேஸ்டா இருக்கும்.

Advertisement

இந்த பப்பாளி காய் கூட பருப்புலாம் சேர்த்து வைக்கும் போது டேஸ்ட் இன்னுமே அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம். வீட்ல காய்கறிகள் இல்லாதப்போ இந்த பப்பாளிக்காய் கிடைத்தது என்றால் அதை வைத்து கூட்டு செய்து சாப்பிடலாம்.ரொம்பவே அருமையா இருக்கக்கூடிய இந்த பப்பாளிக்காய் கூட்ட குழந்தைகளுக்கும் நீங்க கொடுக்கலாம் அவங்களுமே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த அருமையான பப்பாளிக்காய் கூட்டு டேஸ்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

பப்பாளிக்காய் கூட்டு | Papaya Kootu Recipe In Tamil

Print Recipe
ஒருசிலர் பப்பாளி பழம் மட்டும்தான் சாப்பிட்டுருப்பாங்க ஆனா ஒரு சிலர் பப்பாளி காய் வச்சு வெரைட்டியான ஏதாவது ஒரு உணவு சாப்பிட்டு இருப்பாங்க ஆனா
Advertisement
ஒரு சிலர் பப்பாளிக்காய் வச்சு சுத்தமா எதுவுமே சமைச்சிருக்க மாட்டாங்க அது எப்படி இருக்கணும்னு கூட சில பேருக்கு தெரியாது. அவங்களுக்காகவே இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல பப்பாளிக்காய் கூட்டு செய்ய போறோம். ஒருவேளை உங்களுக்கு பப்பாளி காய் கிடைச்சுது அப்படின்னா அது பழுக்குற வரைக்கும் வெயிட் பண்ண முடியலன்னா டக்குனு பப்பாளிக்காய் வச்சு இந்த கூட்டு செஞ்சிடுங்க சாதத்துக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவதற்கு செம டேஸ்டா இருக்கும்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Papaya Kootu
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 232

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் நறுக்கிய பப்பாளிக்காய்
  • 1/2 கப் பாசிப் பருப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு குக்கரில் நறுக்கிய பப்பாளிக்காய் சேர்த்து அதனுடன் பாசிப்பருப்பு பச்சை மிளகாய் ஒன்று, தக்காளி உப்பு அனைத்தும் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • இரண்டு விசில் வந்த பிறகு குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு ஐந்து நிமிடங்கள் இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயத்தூள் அனைத்தும் சேர்த்து தாளித்து கொதிக்கின்ற பப்பாளி காயுடன் சேர்த்து விடவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பப்பாளிக்காய் கூட்டு தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 232kcal | Carbohydrates: 256g | Cholesterol: 1mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU

இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான சௌசௌ மோர்க்குழம்பு ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

6 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

7 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

7 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

9 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

10 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

10 மணி நேரங்கள் ago