நவகிரகங்களில் ஒருவராக இருக்கக்கூடிய புதன் பகவான் தான் நம்முடைய புத்தி கூர்மைக்கு காரணமாக திகழக்கூடியவர். புதன் பகவான் ஒருவருக்கு சாதகமாக இருந்தால் அவருக்கு புத்தி கூர்மை அதிகமாக இருக்கும் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் புத்திசாலித்தனமானதாக இருக்கும். அதே சமயத்தில் யாருக்காவது புதன் பகவானால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் மற்றவர்கள் சாதாரணமாக செய்யும் செயலை கூட செய்ய முடியாமல் தவிப்பார்கள். புத்தி கூர்மை இருந்தால் மட்டுமே படிப்பில் சிறந்து விளங்க முடியும் எனவே புதன் பகவானை வழிபாடு செய்து புத்தி கூர்மையை எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
புதன் பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்க

புதன் பகவானுக்கு தேவதையாக திகழக்கூடியவள் தான் துர்க்கை அம்மன் புதன்கிழமை என்று துர்க்கை மலை வழிபாடு செய்து வந்தால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும் அதோடு புதன் பகவானுக்கு உரிய கிழமையான புதன்கிழமை என்று அவரை நாம் வழிபட்டு வரும்போது புதன் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கும்
புதன் பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை
பச்சை நிறம் தான் புதன் பகவானுக்குரிய நிறமாக திகழ்கிறது பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய காய்கறிகள் புழுக்கள் கீரைகள் போன்றவற்றை வாங்கி கோமாதாவிற்கு புதன்கிழமையில் புதன் ஹோரையில் கொடுத்து விட்டு கோமாதாவின் பால் பகுதியை இரண்டு கைகளாலும் தொட்டு வணங்கி முழு மனதோடு வேண்டிக் கொண்டால் புதன் பகவானின் அருள் நமக்கு கிடைக்கும்.
புதன் பகவானுக்கு பச்சை நிற மாலை
புதன்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள நவகிரகங்களில் இருக்கும் புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி பச்சை பயிரை புதன் பகவானுக்கு முன்பாக வைத்து பச்சை நிற துணியை வாங்கி கொடுத்து அவரை 108 முறை வலம் வந்து வழிபட்டு வர நல்லதே நடக்கும் மேலும் பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய மலர்களை வாங்கி மாலையாக தொடுத்து புதன் பகவானுக்கு கொடுக்கலாம் பச்சை நிறத்தில் மலர்கள் இல்லை என்பதால் துளசி வில்வம் போன்றவற்றை மாலையாக தொடுத்து புதன் பகவானுக்கு அணிவிக்கலாம்.
பச்சைப்பயிறு பரிகாரம்
புத்தி கூர்மையேற்று இருப்பவர்கள் புதன்கிழமை அன்று ஒரு பச்சை நிற துணியில் ஒரு கைப்பிடி அளவு பச்சை பயிரை வைத்து மூட்டையாக கட்டி இரவு படுக்க செல்வதற்கு முன்பாக தலையணைக்கு கீழ் வைத்து படுக்க வேண்டும் அடுத்த நாள் காலையில் அந்த பச்சை நிற மூட்டையை ஓடுகின்ற தண்ணீரில் விட்டு விட வேண்டும் அல்லது பறவைகளுக்கு அதனை சாப்பிட கொடுக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து 16 வாரங்கள் தொடர்ச்சியாக செய்தால் புதன் பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இந்த குறிப்பிட்ட வழிபாட்டை மாணவர்கள் மாணவிகள் செய்யும் போது அவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும். அவர்களால் செய்ய முடியவில்லை என்றால் பெற்றோர்கள் அவர்களை நினைத்து இந்த வழிபாடுகளை செய்து வரலாம்.





