ஒவ்வொருவரும் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறோம் அந்த வசதியான வாழ்க்கைக்கு நமக்கு தேவையான பணம் நமக்கு கிடைக்க வேண்டும். பண வரவை தரக்கூடிய கிரகமாக திகழக்கூடிய சுக்கிர பகவானின் அருள் நமக்கு முழுவதுமாக இருந்தாலே வசதி வாய்ப்பு பணவரவில் எந்த குறையும் இருக்காது. அப்படி சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு சுக்கிர வசியம் ஏற்பட தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்கிரன் அருள்
வாழ்க்கையில் அன்றாடம் நம் வாழ்க்கையை வாழ்வதற்கு போதுமான அளவில் பண வரவை தரக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிர பகவானின் அருளால் அனைத்து விதமான வசதி வாய்ப்புகளும் நமக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட சுக்கிர பகவானை வசியம் செய்வதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்க்க போகிறோம் இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்யும் முறை
வெள்ளிக்கிழமை என்று காலையில் குளிக்க செல்வதற்கு முன்பாக கையில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை எடுத்து உள்ளங்கையில் வைத்து இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு அதனை அப்படியே முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும் உள்ளங்கையில் மகாலட்சுமி தாயார் வீற்று இருக்கிறார் எனவே தயிரை முகத்தில் இப்படி வைப்பதன் மூலம் மகாலட்சுமி தாயார் உடைய அருளை பெற முடியும். மேலும் சுக்கிரவசியம் சேர்ந்து ஏற்படும் சிறிது நேரம் கழித்து நாம் எப்பொழுதும் போல குளிக்க செல்லலாம். சுக்கிர பகவானுடைய அருளோடு சேர்த்து மகாலட்சுமி தாயார் உடைய அருளும் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.
பரிகாரத்தால் ஏற்படும் நன்மைகள்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தயிரை இதேபோல் முகத்தில் தடவி விட்டு குளித்து வருவதன் மூலம் சுக்கிர வசியம் உண்டாகும். மகாலட்சுமி தாயார் உடைய பரிபூரணமான அருளும் நமக்கு கிடைக்கும் இதன் மூலம் நம்முடைய முகத்தில் ஒருவித தெளிவும் தெய்வீகக் கலையும் அதிகரிக்கும். நமக்கு இருக்கக்கூடிய பண தடைகள் அனைத்தும் நீங்கும் தயிரில் அற்புதமான மருத்துவர் குணங்கள் இருக்கிறது மேலும் மகாலட்சுமி தாயார் போல் சுக்கிர பகவானுக்கும் உகந்ததாகவும் தயிர் கருதப்படுகிறது எனவே இந்த முறைகள் நாம் தயிரை பயன்படுத்தும் போது முக அழகு அதிகரிப்பதோடு சுக்கிர பகவானுடைய அருளும் மகாலட்சுமி தாயார் உடைய அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : செல்வத்தை அள்ளி தரும் மகாலட்சுமி மற்றும் குபேரன்




