- Advertisement -
பாகற்காய் குழம்பு என்றாலே சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பாகற்காய் புளிக்குழம்பு என்றால் அவ்வளவு பிடிக்கும். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். கசப்பே இல்லாமல் பாகற்காய் புளி குழம்பு எப்படி செய்வதென்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். பாகற்காய் மிகவும் ஆரோக்கியமான
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான செட்டிநாடு பாகற்காய் கார குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
காய் இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் எடுத்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுங்கள். இந்த குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
பாகற்காய் குழம்பு | Pavakai Kulambu Recipe In Tamil
பாகற்காய் குழம்பு என்றாலே சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பாகற்காய் புளிக்குழம்பு என்றால் அவ்வளவு பிடிக்கும். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். கசப்பே இல்லாமல் பாகற்காய் புளி குழம்பு எப்படி செய்வதென்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். பாகற்காய் மிகவும் ஆரோக்கியமான காய் இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் எடுத்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுங்கள்.
Yield: 4 people
Calories: 210kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- ½ டீஸ்பூன் வெந்தயம்
- 15 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 10 பல் பூண்டு
- புளி சிறிய உருண்டை
- 2 தக்காளி நறுக்கியது
- 2 பாவற்காய் நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
- கருவேப்பிளை கொஞ்சம்
- மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
செய்முறை
- முதலில் புளியை சுடுதண்ணீரி ஊற வைத்து கரைத்து அதில் தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் நறுக்கிய பாகற்காய் சேர்த்து கிளறி கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீரும் ஊற்றி அத்துடன் தேவையான உப்பு, கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் கடைசியாக சிறிய துண்டு வெல்லம் சேர்த்து ஒரு கொத்தி விட்டு இறக்கவும்.
Nutrition
Serving: 600G | Calories: 210kcal | Fat: 1g | Saturated Fat: 0.5g | Fiber: 1g | Sugar: 0.5g